Tag: online

சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைப்பு

தி.மு.க.வினரை வெளியேற்ற முடியாமல் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைப்பு

தி.மு.க.வினரை வெளியேற்ற முடியாமல் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைப்பு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் பேரவையிலிருந்து திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார். திமுகவினரை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறினர். மீண்டும் அமளி ஏற்பட்டதால் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இன்று பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் […]

காணிகளுக்குள் கால் பதிக்கும்

காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை, உணவுத் தவிர்ப்பு போராட்டம்

காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை, உணவுத் தவிர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களிற்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியே குறித்த போராட்டம் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக […]

மோடி இலங்கை வருகை

மோடி இலங்கை வருகை

மோடி இலங்கை வருகை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி விசாகப் பண்டிகை நிகழ்வில் கலந்துக் கொள்ளும் வகையில் எதிர்வரும் மே மாதம் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. விசாகப் பண்டிகை நிகழ்வை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய […]

சுமந்திரன்

ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் – சுமந்திரன்

ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் – சுமந்திரன் திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று நடைபெற்ற இரு முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இதன்போது “ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கிஇ ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே […]

செங்கோட்டையன்-அமைச்சரவை பட்டியல் வெளியீடு

செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் – புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு

செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் – புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு நீண்ட காலத்திற்கு பின்னர் செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். 31 பெயர்கள் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்ட குழப்பம் முடியும் நிகழ்வாக, இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் 30 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்க இருக்கின்றனர். […]

சர்வஜன வாக்கெடுப்பு-சந்திரிகா

புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சந்திரிகா அதிரடி

புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சந்திரிகா அதிரடி உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று எதிரணியிலுள்ள சில தரப்பினர் மற்றும் பேரினவாத அமைப்புக்களும் வலியுறுத்திவரும் நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரசாரம் ஒன்றை முன்னெடுப்பது அவசியம் என்றும் […]

நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்ல தீர்ப்பு ஜெயலலிதா அண்ணன் மகள்

நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்ல தீர்ப்பு – ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா

நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்ல தீர்ப்பு – ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி: சொத்து குவிப்பு வழக்கு வழக்கில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. சிறைக்கு செல்ல வேண்டியவர்கள் தான் செல்கிறார்கள். இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி தேர்வு என்பது ஜெ., விருப்பத்திற்கு மாறாக நடந்துள்ளது. சசிகலா குடும்பத்தினர் யாரை விரும்பினாரோ அவர்களுக்கு பதவியை […]

பொன்னையன் உள்ளிட்ட முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

அதிமுகவில் இருந்து கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்ட முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம்

அதிமுகவில் இருந்து கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்ட முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சி. பொன்னையன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவை கைப்பற்றிய சசிகலாவுக்கு எதிராக முதலில் கலகக் குரல் எழுப்பியவர் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி. இதையடுத்து கடந்த 7-ந் தேதியன்று முதல்வர் […]

சரணடைய 4 வார காலம் அவகாசம்

சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்

சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் சரணடைய 4 வாரம் அவகாசம் கேட்டு சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். உடல் நிலை சரியில்லை என்பதால் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என அவர் காரணம் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 […]

சசிகலா உள்ளிட்டோர்

சசிகலா உள்ளிட்டோர் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவு

சசிகலா உள்ளிட்டோர் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவு சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் […]