Tag: online tamil news

சபாநாயகர் வி.பி.தனபால்

எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது – சபாநாயகர் வி.பி.தனபால்

எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது – சபாநாயகர் வி.பி.தனபால் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அவை சரியாக 1 மணிக்கு மீண்டும் கூடியது. அவை கூடியபோது பேசிய சபாநாயகர் வி.பி.தனபால், “எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது. சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டுத்தானே நான் அவையை நடத்த முடியும்” என்றார். அவையில் மீண்டும் பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவையின் பல்வேறு விதிகளை சுட்டிக்காட்டி ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றார். முன்னதாக, […]

தமிழ் மக்களுக்குள் கோவிந்தன் கருணாகரம்

தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்த முயற்சி – கருணாகரம்

தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்த முயற்சி – கருணாகரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றாரா என்கின்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘எமது […]

இராணுவக் கப்பல்களுக்கு - பிரதமர் ரணில்

இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல்

இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல் இந்து சமுத்திரத்தில் அமைதியான மற்றும் சுதந்திர கடற்போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடனான மாநாடொன்றை ஏற்பாடு செய்வதற்கு ஸ்ரீலங்கா தயாரென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கான சிறந்த வழி இதில் பயணிக்கும் இராணுவக் கப்பல்களுக்காக ஒழுக்கக் கோவை ஒன்றை தயாரிப்பது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய […]

நீதிபதி நியமிப்பு-ஜீ.எல். பீரிஸ்

நீதிபதி நியமிப்பு தொடர்பான பீரிஸின் கருத்து இனத்துவேஷத்தின் வெளிப்பாடு: மட். சிவில் சமூகம்

நீதிபதி நியமிப்பு தொடர்பான பீரிஸின் கருத்து இனத்துவேஷத்தின் வெளிப்பாடு: மட். சிவில் சமூகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நீதிபதியாக, சமீபத்தில் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட வழக்கறிஞர் இராமநாதன் கண்ணனின் நியமனம் குறித்து, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், விமர்சித்துள்ளமை, இனத்துவேஷ காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் தெரிவித்துள்ளது. நீதிபதி கண்ணனின் நியமனத்தை குறித்தும், அதனை வழங்கிய ஜனாதிபதியைப் பற்றியும் அவதூறுகள் ஏற்படும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். […]

எடப்பாடி பழனிசாமி அணி

அமளிக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் காத்திருப்பு !

அமளிக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் காத்திருப்பு ! பலத்த அமளிக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் பேரவையில் அமைதி காத்தனர். சட்டப்பேரவையில் இன்று பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் […]

நில மீட்பு போராட்டம் - ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்

நில மீட்பு போராட்டம் தொடர்பில் தீர்வுக்கு வலியுறுத்துவோம் – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்

நில மீட்பு போராட்டம் தொடர்பில் தீர்வுக்கு வலியுறுத்துவோம் – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையில் கலந்துரையாடப்பட்டு முடிவுக்கு வலியுறுத்தப்படும் என, யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம், எந்த முடிவுமின்றித் தொடர்வது மனவருத்தம் தருவதாக ஆயர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பில் விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்குச் […]

இயக்குநர் எலைன் பியர்சன்

சர்வதேச நீதிபதிகள் அவசியம் – இயக்குநர் எலைன் பியர்சன்

சர்வதேச நீதிபதிகள் அவசியம் – இயக்குநர் எலைன் பியர்சன் ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்கற்றங்கள் குறித்த விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகளை பயன்படுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலியாவிற்கான இயக்குநர் எலைன் பியர்சன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கயைானது ஐ.நா தீர்மானத்தின் தேசிய கூறுகளை நோக்கி முன்னேற்றத்தை எட்டியுள்ளது. எனினும் நீதி வழங்கும் செயற்பாடுகளில் சர்வதேச […]

கேப்பாபுலவு மக்களுடன்

கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள்

கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள் கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட இடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். கேப்பாபுலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காகவே தாம் இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் […]

தீர்வை வழங்குங்கள் - அருட்தந்தை மங்களாராஜா

இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள் – அருட்தந்தை மங்களாராஜா

இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள் – அருட்தந்தை மங்களாராஜா கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்தும் யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கோப்பபுலவு பிலவுக்குடியிருப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களாராஜா தெரிவித்தார். 18 ஆவது நாளாக மக்களின் போராட்டம் தீர்வின்றி தொடரும் நிலையில் எதற்காக தொடர்ந்தும் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். […]

சிறுபான்மை மக்கள்-செய்ட் அல் ஹுசைன்

சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா.

சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா. எவ்வித அநீதியான செயற்பாடுகளும் இன்றி சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்தார். உலக நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதியான செயற்பாடுகள் தொடர்பில் செய்ட் அல் ஹுசைன் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் சிறுபான்மை மக்கள் மற்றும் சிறுபான்மை […]