Tag: online tamil news

பஞ்சாப், கோவா

பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது   பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் கூட்டணி வேட்பாளர் களுக்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய […]

சசிகலா, முதல்வர் ஒ.பி.எஸ்

மெரீனாவில் 144 தடை உத்தரவு மீறி சசிகலா, முதல்வர் ஒ.பி.எஸ். அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி

மெரீனாவில் 144 தடை உத்தரவு மீறி சசிகலா, முதல்வர் ஒ.பி.எஸ். அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி   மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஒபிஎஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா, ஒ.பன்னீர் செல்வம், தம்பித்துரை உள்ளிட்ட அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் இன்று அஞ்சலி செலுத்தினர். அண்ணாவின் […]

அண்ணா நினைவு தினம்

அண்ணா நினைவு தினம்-திமுகவினர் 144 தடையை மீறி பேரணி

அண்ணா நினைவு தினம்-திமுகவினர் 144 தடையை மீறி பேரணி   அண்ணா நினைவு தினம்.. மெரினாவில் திமுகவினர் பிரமாண்ட பேரணி.. அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின் முன்னாள் முதல்வரும் திமுகவை நிறுவியவருமான அறிஞர் அண்ணாவின், 48வது நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவினர் பிரமாண்ட அமைதி பேரணி நடத்தினர். அறிஞர் அண்ணா நினைவுதினத்தையொட்டி, சென்னை சேப்பாக்கம் முதல் மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம்வரை திமுக அமைதி […]

அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள்

அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள்   இன்று அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தன் வசிய குரலால்… கவரும் எழுத்தால் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கி தமிழகத்தை ஆண்டவர் அண்ணன் அறிஞர் அண்ணா. கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும் இதனை தன் வாழ்நாளில் கடைசி வரை கடைபிடித்தார். அண்ணா. சி.என்.ஏ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான […]

எண்ணூர் கடல் பகுதியில்

எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றுவதற்காக திரண்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்

எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றுவதற்காக திரண்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்   எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சரக்கு கப்பலில் இருந்த […]

அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன்

இணையத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தாக்கு

இணையத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தாக்கு   மேற்குலக நாடுகளின் ஜனநாயகத்தையும், முக்கிய உள்கட்டுமானங்களையும் குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து இணைய தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்கவும், மேற்குலக நாடுகளின் அரசுகளை நிலைகுலைய செய்யவும், நேட்டாவை பலவீனப்படுத்தவும் தவறான தகல்களை ஆயுதங்களாக ரஷ்யா பயன்படுத்துவதாக அவர் கூறியிருக்கிறார். இணைய வழித் தாக்குதல் […]

குமார் குணரட்ணம்

குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிராஜாவுரிமை

குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிராஜாவுரிமை   முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் குமார் குணரட்னத்திற்கு ஸ்ரீலங்கா பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் அவருக்கான பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்காவின் குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கேகாலை பொலிஸாரால் குமார் குணரட்னம் கைதுசெய்யப்பட்டிருந்தார். […]

பெண்களின் அரசியல் பங்களிப்பு : யாழில் கையெழுத்து வேட்டை

பெண்களின் அரசியல் பங்களிப்பு : யாழில் கையெழுத்து வேட்டை   அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்தும் நோக்கில் கையெழுத்து பெறும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு தேசத்திற்கான பெண்களின் உரிமைக் குரல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் பலரும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்களை கையெழுத்தினை பதிவு செய்தனர். கடந்த காலங்களில் அரசியலில் […]

வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணை

வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணை   யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கில் பத்தாவது சந்தேக நபரை தொடர்ந்தும் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்திற்கு பத்தாவது சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அரச […]

சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை   ஸ்ரீலங்காவில் நல்லாட்சி ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் மீதான மோசமான திணிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பெப்ரவரி 4 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை […]