மோடி மற்றும் ஜெட்லி மீது சசிகலா கடும் அதிருப்தி பார்லிமென்டில் கடந்த 9ம் தேதி, கிடைத்த சில நிமிடங்களில் மோடியிடம், சசிகலாவுக்கே பெரும்பான்மை இருக்கிறது. அவரையே ஆட்சி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தம்பித்துரை கேட்டுள்ளார். அதற்கு பிரதமர், எதுவாக இருந்தாலும் கவர்னர் முடிவெடுப்பார் எனக் கூறிவிட்டார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியும், இணக்கமான பதில் கிடைக்காத வருத்தத்தில் இருந்த, துணை சபாநாயகர் தம்பிதுரை, அடுத்ததாக, மத்திய நிதியமைச்சர், […]
Tag: online tamil news
சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்
சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் தொலைக்காட்சிகளில் வெளியானது போல கடத்திச் செல்லவோ, காவலில் வைக்கவோ தாங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை என்று சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், கோயம்புத்தூர், கவுண்டம்பாளையம் எம்எல்ஏவுமான வி.சி.ஆறுக்கட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, ”அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மொபைல் எண்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களை வெளியே விடுங்கள். […]
தலைமைச் செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஐஜி, கமிஷனருடன் ஆளுநர் வித்யாசாகர்ராவ் திடீர் ஆலோசனை
தலைமைச் செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஐஜி, கமிஷனருடன் ஆளுநர் வித்யாசாகர்ராவ் திடீர் ஆலோசனை தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி தாமரைக்கண்ணன் உள்ளிடோருடன் ஆளுநர் வித்யாசகர் ராவ் திடீரென ஆலோசனை நடத்தினார். தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் தமிழக ஆளுநர் இன்று திடீரென ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது தமிழக சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் […]
சசிகலா முதல்வராவதற்கு அவசரப்பட என்ன காரணம்? – ஜெயலலிதாவின் தோழி லதா கேள்வி
சசிகலா முதல்வராவதற்கு அவசரப்பட என்ன காரணம்? – ஜெயலலிதாவின் தோழி லதா கேள்வி சசிகலா முதல்வராவதற்கு அவசரப்பட என்ன காரணம்? என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி லதா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்கப் போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே கடுமையான பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் நெருங்கிய […]
அதிமுக அவைத்தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் நீக்கப்பட்டு கே.ஏ.செங்கோட்டையன் நியமனம்
அதிமுக அவைத்தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் நீக்கப்பட்டு கே.ஏ.செங்கோட்டையன் நியமனம் அதிமுக அவைத்தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக கே.ஏ.செங்கோட்டையன் அப்பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தியதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் அதிமுகவினர் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் […]
இலங்கை அரசியலில் புதிய அத்தியாயம் மைத்திரி ரணில் அரசு வழிவகுக்குமா? சு.நிஷாந்தன்
இலங்கை அரசியலில் புதிய அத்தியாயம் மைத்திரி ரணில் அரசு வழிவகுக்குமா? சு.நிஷாந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்று மக்களால் தோட்கடிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும் தெரிவுசெய்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பேரினவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை தோட்கடித்து மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சியை மலரச்செய்வதற்கு தற்போதைய அரசு கடுமையான பிராயச்சித்தங்களை மேற்கொண்டு வருகின்றமை கண்கூடு. முன்னாள் மஹிந்த அரசின் […]
எழுக தமிழை தடுத்தவர்கள் மூக்குடைபட்டனர்
எழுக தமிழை தடுத்தவர்கள் மூக்குடைபட்டனர் மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணியை நடத்துவதற்கு எதிராக பலர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர்களின் முயற்சி தோல்வியில் நிறைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களே எழுக தமிழ் பேரணிக்கு எதிராக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே […]
ஒற்றையாட்சி : தமிழர்களுக்கான சாவு மணி
ஒற்றையாட்சி : தமிழர்களுக்கான சாவு மணி ஒற்றையாட்சி முறையிலான புதிய அரசியலமைப்பையே அரசாங்கம் முன்வைக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இவ்வாறு முன்வைக்கப்படும் அரசியலமைப்பானது தமிழர்களுக்கு சாவு மணியாக அமையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசத்தின் அடையாளத்தை அழிப்பதை நோக்காக கொண்டே அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. […]
மைத்திரி இந்தோனேசியாவிற்கு விஜயம்
மைத்திரி இந்தோனேசியாவிற்கு விஜயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் எதிர்வரும் 6 ஆம் திகதி இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஈரானுக்கான விஜயமொன்றை ஜனாதிபதி மேற்கொள்ளவிருந்தபோதும் அதிக வேலைப்பளு காரணமாக ஈரானிற்கான விஜயம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையிலேயே ஜனாதிபதி இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் மார்ச் மாத பிற்பகுதியில் ரஷ்யாவிற்கும் செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன்போது ஜனாதிபதி […]
தகவலறியும் சட்டம்: அஷ்ரஃப்பின் மரணம் குறித்த புலனாய்வு அறிக்கை கோரினார் பஷீர்
தகவலறியும் சட்டம்: அஷ்ரஃப்பின் மரணம் குறித்த புலனாய்வு அறிக்கை கோரினார் பஷீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட தனிநபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் விண்ணப்பம் ஒன்றின் மூலம் கோரியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பியுள்ள மேற்படி […]





