எழுக தமிழை தடுத்தவர்கள் மூக்குடைபட்டனர் மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணியை நடத்துவதற்கு எதிராக பலர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர்களின் முயற்சி தோல்வியில் நிறைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களே எழுக தமிழ் பேரணிக்கு எதிராக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே …
Read More »ஒற்றையாட்சி : தமிழர்களுக்கான சாவு மணி
ஒற்றையாட்சி : தமிழர்களுக்கான சாவு மணி ஒற்றையாட்சி முறையிலான புதிய அரசியலமைப்பையே அரசாங்கம் முன்வைக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இவ்வாறு முன்வைக்கப்படும் அரசியலமைப்பானது தமிழர்களுக்கு சாவு மணியாக அமையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசத்தின் அடையாளத்தை அழிப்பதை நோக்காக கொண்டே அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. …
Read More »மைத்திரி இந்தோனேசியாவிற்கு விஜயம்
மைத்திரி இந்தோனேசியாவிற்கு விஜயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் எதிர்வரும் 6 ஆம் திகதி இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஈரானுக்கான விஜயமொன்றை ஜனாதிபதி மேற்கொள்ளவிருந்தபோதும் அதிக வேலைப்பளு காரணமாக ஈரானிற்கான விஜயம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையிலேயே ஜனாதிபதி இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் மார்ச் மாத பிற்பகுதியில் ரஷ்யாவிற்கும் செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன்போது ஜனாதிபதி …
Read More »தகவலறியும் சட்டம்: அஷ்ரஃப்பின் மரணம் குறித்த புலனாய்வு அறிக்கை கோரினார் பஷீர்
தகவலறியும் சட்டம்: அஷ்ரஃப்பின் மரணம் குறித்த புலனாய்வு அறிக்கை கோரினார் பஷீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட தனிநபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் விண்ணப்பம் ஒன்றின் மூலம் கோரியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பியுள்ள மேற்படி …
Read More »காணியிலிருந்து இராணுவம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும்
காணியிலிருந்து இராணுவம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும் புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது. 19 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள், வீடுகள் மற்றும் பொருளாதார நிலையங்கள் என்பவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 8 வருடங்களாக வாடகை வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கேப்பாபுலவு மக்களிற்கு …
Read More »தீர்வின்றி 11ஆவது நாளாகவும் தொடர்கிறது பிலவுக்குடியிருப்பு போராட்டம்
தீர்வின்றி 11ஆவது நாளாகவும் தொடர்கிறது பிலவுக்குடியிருப்பு போராட்டம் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் போராட்டம் பதினோராவது நாளாக இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது. கடந்த 31 ஆம் திகதி மக்கள் தொடர்போராட்டத்தை ஆரம்பித்து விமானப்படை முகாமிற்கு முன்பாக கூடாரம் அமைத்து இரவு பகலாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போரட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும் கூட இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் மக்கள் தமது போராட்டத்தை …
Read More »நம்பிவந்த எமக்கு ஏமாற்றமே தொடர்கிறது: காணாமல் போனோரின் உறவினர்கள்
நம்பிவந்த எமக்கு ஏமாற்றமே தொடர்கிறது: காணாமல் போனோரின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தீர்வை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து எம்மை வரவழைத்திருந்த போதிலும், இங்கு எமக்கு ஏமாற்றமே தொடர்ந்து வருகிறது என வவுனியா மாவட்டத்திற்கான காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் தலைவி வனிதா தெரிவித்துள்ளார். முக்கிய அமைச்சர்களுக்கும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே …
Read More »சி.வி. தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பம்
சி.வி. தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பம் காலம் காலமாக தீர்க்கப்படாதுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணைந்த வடகிழக்கே தீர்வு என்பதையும், சமஷ்டியின் மூலமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதையும் வலியுறுத்தி கிழக்கு எழுக தமிழ் பேரணி தற்போது எழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது. மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் அருகிலிருந்து பேரணி ஆரம்பமாகவுள்ள நிலையில், இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பலர் …
Read More »மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி விழிப்பூட்டல் நடவடிக்கை
மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி விழிப்பூட்டல் நடவடிக்கை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு நகரில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தமிழ் மக்கள் …
Read More »தாயக மக்களின் மண்மீட்பு போராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு ஆதரவு
தாயக மக்களின் மண்மீட்பு போராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு ஆதரவு படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு-பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் நடைபெற்று வரும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது. கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அனாதைகளாக்கப்பட்டிருக்கும் பாடசாலை சிறார்கள் தமது உரிமைகளை பறிகொடுத்த நிலையில் இன்று நடுத்தெருவில் நிர்க்கதியாகியுள்ள நிலையில், இம்மக்களின் போராட்டம் …
Read More »