Tag: natarajan

சசிகலாவுக்கு பரோல்

சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, நடராஜனின் இறப்பு சான்றிதழ் பெற்றவுடன் சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, சசிகலாவுக்கு 15 நாள் பரோல் வழங்கியுள்ளது பெங்களூரு சிறை நிர்வாகம். இதனையடுத்து இன்னும் சில […]

நடராஜன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சசிகலாவின் கணவரும் பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகருமான நடராஜன் இன்று அதிகாலை உடல்நலக்கோளாறால் காலமானார். அவருக்கு வயது 74. நடராஜனின் மறைவுக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருமாவளவன்: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழ விடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழவிடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா: […]

நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

பிரபல பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகரும் சசிகலா கணவருமான நடராஜன் இன்று காலை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனார். இந்த வகையில் சற்றுமுன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெசண்ட் நகரில் உள்ள நடராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் துரைமுருகன், பொன்முடி , எ.வ.வேலு உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் உடனிருந்தனர். நடராஜன் மறைவு குறித்து ஸ்டாலின் கூறியபோது, ‘நடராஜனின் மறைவு […]