வெள்ளவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வந்த திருமண மண்டபம் ஒன்று இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தொடர்ந்தும் அங்கு தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன. இந்த தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் முப்படையினர் ஈடுபட்டுள்ளதுடன், பொது மக்களின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் கூறினார். எனினும் இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் புதையுண்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சம்பவத்தில் படுகாயமடைந்த 19 […]





