Tag: வீ.ஆனந்த சங்கரி

யாழில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு!

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேசிய மாநாடு நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் தலைமையில் மேற்படி மாநாடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வட.மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட.மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் சிறீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.