Tag: விஜயதாஸ  ராஜபக்ஷ

பொன்சேகா

சுயகௌரவம் இருக்குமானால் உடன் பதவி விலகவேண்டும் விஜயதாஸ! – வலியுறுத்துகின்றார் பொன்சேகா

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “விஜயதாஸ ராஜபக்ஷ ஊழல்வாதிகளையும், மோசடியாளர்களையும் காப்பாற்றிவருகின்றார். குற்றம் செய்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்குத் தடையாக இருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளாகியிருக்கின்றார். அவர் இந்தப் பதவியைவிட்டு விலகினால் மட்டுமே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தமுடியும். எனவே, அவருக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் […]

இராஜிநாமா வேண்டாம்! – அமைச்சர் விஜயதாஸவிடம் தேரர்கள் குழு கோரிக்கை 

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யவேண்டாம் என தேரர்கள் குழுவினர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர். பௌத்த சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு நேற்று வந்திருந்தனர். அமைச்சரை சந்தித்து ஆசீர்வாதம் வழங்குவதற்காகவும் பதவியை இராஜிநாமா செய்யவேண்டாம் எனக் கோருவதற்காகவும் தாம் வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அமைச்சர் அங்கு வருகை தராத காரணத்தால் அதிகாரிகளைச் சந்தித்துவிட்டு […]

பதவி துறக்கின்றார் விஜயதாஸ! நீதி அமைச்சராகிறார் ஜயம்பதி!!

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்யவுள்ள நிலையில், புதிய நீதி அமைச்சராக எவரை நியமிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் ஆலோசனை நடத்திவருகின்றனர் என அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. புதிய நீதி அமைச்சர் பதவிக்கு முக்கிய இரண்டு அமைச்சர்களின் பெயர்கள் அடிபடுவதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவின் பெயர் சிபாரிசு பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகத் தெரியவருகின்றது. […]

மூவரடங்கிய குழுவின் இறுதி முடிவு இன்று! – கூடுகிறது ஐ.தே.கவின் நாடாளுமன்றக்குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில்,  நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறித்த விசாரணை அறிக்கையும் இதன்போது சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன்போது நீதி அமைச்சர் விஜயதாஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் […]

மஹிந்தவுடன் இணையாதீர்; மைத்திரி அணியில் சேரவும்! – விஜயதாஸவுக்கு டிலான் அழைப்பு   

“நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை ஐக்கிய தேசியக் கட்சி தனது கட்சியிலிருந்து விலக்கினால் அவர் மஹிந்தவுடன் போய் இணையாமல் மைத்திரியுடன் வந்து இணையவேண்டும்.” – இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் டிலான் பெரேரா. இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கு நீதி அமைச்சர் விஜயதாஸ  எதிப்புத் தெரிவித்துள்ளதால் அவருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள்  தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த விடயத்தில் விஜயதாஸவுக்கு ஆதரவு […]

பறிபோகுமா விஜயதாஸவின் அமைச்சுப் பதவி? – இன்று கூடுகின்றது ஐ.தே.கவின் செயற்குழு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்  கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிரான குரல்கள் ஐ.தே.கவுக்குள் வலுப்பெற்றுள்ள நிலையில், அவரின் அமைச்சுப் பதவியைப் பறிப்பதற்கான தீர்மானம் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்த அமைச்சரவையின் […]

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளருடன் விஜயதாஸ கடும் வாக்குவாதம்!

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு விடயத்தில் ஐ.நாவின் தலையீடுகள் தொடர்பாக, கொழும்பு வந்திருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளருக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ  ராஜபக்ஷவுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஐந்து நாட்கள் பயணமாக மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு  குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரான பென் எமர்சன், ஐந்து நாட்கள் விஜயமாக கடந்த 10ஆம் திகதி இலங்கைக்கு […]