“அமைச்சுகள் உட்பட சகல அரச நிறுவனங்களுக்குமான வாகன இறக்குமதியை இவ்வருடத்தில் முழுமையாக நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக அழிவடைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான திட்டத்தை விரைவாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை கூட்டத்தின்போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். “மண்சரிவு, வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த […]





