வவுனியாவில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 100 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளன. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு கூட்டத்தினை அடுத்து வீதியோரங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவுடன் நகரசபை ஊழியர்கள் …
Read More »இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் – திருமாவளவன்
இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் – திருமாவளவன் “இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந், இலங்கைக்குச் செல்ல வேண்டாம்” என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதுடன், இந்திய ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், லைக்கா …
Read More »கால அவகாசம் கொடுப்பதற்கு கூட்டமைப்பு யார் ?
கால அவகாசம் கொடுப்பதற்கு கூட்டமைப்பு யார் ? இணக்க அரசியல் என கூறிக்கொண்டு, சம்பந்தமற்ற கருத்துக்களை தமிழ் அரசியல்வாதிகள் வெளியிடுவதாக சம உரிமைக்கான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட, புதிய மாக்ஸ்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க செந்திவேல், இரண்டு வருட காலஅவகாசம் வழங்குவதை அமெரிக்காவும் மேற்குலகமுமே தீர்மானிக்கின்றது என குறிப்பிட்டார். வவுனியாவில் நேற்றுமுன்தினம் ஒன்று …
Read More »வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுத்து வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கின்றது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் அருகில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் உணவுத்தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. …
Read More »வன்னிப் பல்கலைக்கழக கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு
வன்னிப் பல்கலைக்கழக கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த கோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வவுனியாவில் பேரணி ஒன்று நடைபெறவுள்ளது. இந்த பேரணிக்கு அனைவரையும் பங்கேற்குமாறு வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். 1992 ஆம் ஆண்டு இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் பல்கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல்கலைகழக கல்லூரிகள் பல்கலைகழகங்களாக …
Read More »வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீண்டும் போராட்டத்தில்
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீண்டும் போராட்டத்தில் வவுனியாவில்காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெக்கும் போராட்டத்தை பொய் வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றலாம் என அரசியல்வாதிகள் எண்ணக்கூடாது என உணவுதவிர்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து …
Read More »புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போரளிகள் நால்வர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நிகழ்வு புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர் கேணல் ஹமில்டோன் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் புனர்வாழ்வு நிலைய பயிற்சிப் பொறுப்பாளர் கேணல் சித்திரகுணதூங்க, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த குணசேகர, புனர்வாழ்வு நிலைய பின்னாய்வு அதிகாரி ஏகன் பெர்ணான்டோ, …
Read More »நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு
நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு நிலமீட்பு போராட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு மக்களுக்கு தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் அண்மையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் போனவர்களது உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் மாலை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தனர். சொந்த நிலம் மீளத்திரும்புவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராம …
Read More »வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல்
வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல் வவுனியாவில் இன்று மாலை 3.30 மணியளவில் இ.போ.ச. சாரதி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More »