Tag: வவுனியாவில்

வவுனியாவில் தப்பி சென்ற வாகனத்தை துரத்திப் பிடித்த இளைஞர்கள்

வவுனியா- மன்னார் பிரதான வீதியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனத்தை துரத்திப் பிடித்த பிரதேச இளைஞர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. வவுனியா நகரிலிருந்து இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று , வேப்பங்குளம் பகுதியில் பின்புறமாகப் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது […]

வவுனியாவில் மீட்கப்பட்ட ரி56 ரக துப்பாக்கி வகைகள்

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் காட்டுப்பகுதியிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு பகுதியிலிருந்தே ரி 56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற விஷேட அதிரடிப்படையின் அதனை மீட்பதற்குரிய நடவடிக்கையினை பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். முன்னர் விடுதலைப் புலிகள் குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பொலிஸார் […]

வவுனியாவில் குவிக்கப்பட்ட விசேட அதிரடி படையினர்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி அந்த மண்டபத்தை விசேட அதிரடி படையினர் பரிசோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நகரசபை வாயில் மற்றும் நகரசபை மண்டபத்தில் பாதுகாப்பு அதிரடி படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பெருமளவில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வீடு தீக்கிரை

வவுனியாவில் வீடு தீக்கிரை !

வவுனியாவில் வீடு தீக்கிரை ! வவுனியாவில் சாதிக்காதல் விவகாரம் காரணமாக காதலர் களில் ஒருவரின் வீடொன்றின் மீது தாக்குதல் ஒன்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது மேற்கண்ட சம்பவம் வவுனியா தரணிகுளப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.