வட.மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் 3 முக்கிமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறான சந்திப்புக்கள் தொடரும் எனவும் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக விரைவில் சந்தித்துப் போசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் …
Read More »கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு காலதாமதமின்றி கூட்டப்பட வேண்டும்: ரெலோ வலியுறுத்தல்
வட. மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு சுமூகமான தீர்வை எட்டும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காலதாமதமின்றி உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா வலியுறுத்தியுள்ளார். வட. மாகாண சபையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்தாலோசிக்கும் வகையில் ரெலோ அமைப்பு நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுத்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் …
Read More »வடமாகாண சபை உறுப்பினர்கள் இருவருக்கு சபையை தலைமை தாங்கும் அதிகாரம்
வட மாகாண சபை அவை தலைவர் மற்றும் பிரதி அவை தலைவர் சபையில் இல்லாத நிலையில், சபையை தலைமை தாங்கும் அதிகாரம் வடமாகாண சபை உறுப்பினர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 90 ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே, மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோருக்கு அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளார். …
Read More »