வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆதரவு வழங்கியுள்ளது. நீலமீட்பு போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, எதிர்வரும் 27 ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து, கடந்த 49 நாளாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் […]
Tag: வடக்கு
வடக்கு, கிழக்கு ஹர்த்தால்: அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென சம்பந்தன், ஹக்கீம், ரிஷாத் வலியுறுத்து
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின்பேரில் நாளைமறுதினம் வியாழக்கிழமை வடக்கு, கிழக்கில் நடைபெறும் ஹர்த்தால் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அழைப்பு […]
அரசாங்கம் இணங்கினால் மக்களது காணிகளிலிருந்து வெளியேற தயார்: இராணுவம்
இடமாற்றத்திற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், மக்களது காணிகளிலிருந்து உடனடியாக வெளியேற தயார் என இராணுவத்தினர் உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள பொதுமக்களது காணிகள் குறித்து ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்கும் படையினருக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செலயகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து […]
வடக்கு, கிழக்கு காணி பிரச்சினைகள் : இம்மாதம் இரண்டு முக்கிய பேச்சுக்கள்
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இம்மாதம் இரண்டு முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அந்தவகையில் நாளை திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். இதேவேளை, எதிர்வரும் 24 திகதி திங்கட்கிழமை மீள்குடியேற்ற […]
வடக்கு கிழக்கு இணைக்கப்படாத தீர்வினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை
வடக்கு கிழக்கு இணைக்கப்படாத தீர்வினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்காது முன்வைக்கப்படும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செவ்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இதனால் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக மேற்கொள்ளும் போராட்டங்களை வடக்கு கிழக்கினை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் […]
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும்: ரதன தேரர்
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும்: ரதன தேரர் வடக்கு மாகாணத்துக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய பேரவையின் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கலாம் என்று பலரும் கூறுகின்ற நிலையில், இதனை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்களுக்கு […]
மீள வழங்க முடியாத காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும்: டிலான்
மீள வழங்க முடியாத காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும்: டிலான் பொதுமக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் மீள வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட முடியாத காணிகள் இருப்பின் அவற்றுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் ராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களின் விவகாரம் குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக், இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், […]





