வடக்கு மாகாண அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”கடந்த 14ஆம் திகதிக்கு முன்னதாகவே முதலமைச்சர் என்னை அழைத்து அமைச்சு பொறுப்புக்களை ஏற்க முடியுமா என கேட்டிருந்தார். ஆனால் அந்த கோரிக்கைக்கு நான் நிராகரித்துள்ளேன். நான் […]





