Tag: வடக்கில்

சிங்களமயமாகும் கிளிநொச்சி வைத்தியசாலை : தமிழர்கள் அதிர்ச்சி

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் உயிர்காக்கும் மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கிவருவதாக மக்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர். கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மருத்துவச் சேவையை நாடிவருகின்றனர். ஆனால், இந்த வைத்தியசாலையின் அண்மைக்கால போக்குகள் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முல்லைத்தீவுக்கு அடுத்தபடியாக கிளிநொச்சி மாவட்டமே காணப்படுகிறது. யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. […]

வடக்கில் எதற்கெடுத்தாலும் ‘புலி’ எனப் பொய்ப்பிரசாரம்!

வடக்கு சமூகத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளைக் காரணங்காட்டி எதற்கெடுத்தாலும் புலிகள் மீளத் தோற்றம் பெறுகின்றனர் எனப் பொய்ப்பிரசாரத்தை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விசனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், தேர்தல்களைப் பிற்போடும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை. மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவேண்டும் என்றே கூறுகின்றோம். தேர்தலைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிற்போட நடவடிக்கை எடுத்துவருவதாக […]

வடக்கில் வன்முறைகளுக்கு மொழிப்பிரச்சினையே காரணம்: விக்னேஸ்வரன்

வடக்கில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்கு பிரதான காரணம் மொழிப்பிரச்சினையே என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. அங்கு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மைக் காலங்களில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக யாழில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் மொழிப்பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளன. […]

வடக்கில் திட்டமிட்ட குழப்பநிலையை ஏற்படுத்த சதி?

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸார் அவசர அவசரமாக முன்னாள் போராளிகள் மீது குற்றஞ்சுமத்துவது, வடக்கில் திட்டமிட்ட குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சட்டத்தரணி சுகாஸ் கனகரட்னம் குறிப்பிட்டுள்ளார். அல்லது முன்னாள் போராளிகளை இலக்குவைத்து இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்கேதத்தையும் ஏற்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், முன்னாள் போராளிகள் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர […]