கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை மூலம் அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் வடகொரியா இருப்பதாக, ஜப்பானைச் சேர்ந்த போர்க்கலை நிபுணர்கள் கணித்துள்ளனர். உலக நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளி அடிக்கடி ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை பரிசோதனை செய்யும் வடகொரியா, வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஹ்வாசாங்-14 …
Read More »கோமாவில் இருந்த மாணவன் மரணம்: வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் கடும் கண்டனம்
வடகொரியாவால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கோமா நிலையில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவரின் மரணத்துக்கு வடகொரியாவை குற்றம்சாட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு …
Read More »வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி: அதிபர் கிம் ஜான்-யுன் பாராட்டு
வடகொரியா நடத்திய குறைந்த அளவிலான தூரம் செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் முயற்சியில் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், வடகொரியா அடையாளம் தெரியாத குறைந்த …
Read More »வடகொரியா அத்துமீறல்: போருக்கு தயாராகுங்கள் என தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் கட்டளை
வடகொரியா எல்லை பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். வடகொரியா அத்துமீறல்: போருக்கு தயாராகுங்கள் என தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் கட்டளை சியோல்: வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை போன்றவற்றை …
Read More »வடகொரியாவை மிரட்டுவதை விடுத்து, பேச்சுவார்த்தை நடத்துங்கள்: புதின் அறிவுரை
உலக நாடுகள் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மிரட்டக் கூடாது என்று ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார். உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடகொரியா நேற்று மீண்டும் ஒரு அணு குண்டு சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக நாடுகள் வடகொரியா …
Read More »சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்க மாட்டோம்: வடகொரியா
அணு ஆயுத சோதனை விவகாரத்தில் வடகொரியா, சீனா இடையே மோதல் போக்கு வெடித்துள்ளது. சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்கமாட்டோம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது. வட கொரியா தொடர்ந்து நடத்தும் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இதனால் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க அரசு பல்வேறு பொருளாதார தடைகளை அவ்வவ்போது கொண்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க …
Read More »அணு ஆயுத சோதனையை கைவிட மாட்டோம் – வடகொரியா அறிவிப்பு
ஐ.நா. தீர்மானத்தை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன. புதிதாக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க மந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனர். வடகொரியாவுக்கு எதிராக கடினமான நிலைப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ளார். இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. …
Read More »அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தென்கொரியா வருகை: வடகொரியா ராணுவ பயிற்சியால் போர் பதட்டம்
அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தென் கொரியா வருகையாலும், வட கொரியா ராணுவ பயிற்சியாலும் கொரிய தீபகற்பத்தில் போர்பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஐ.நா.வின் உத்தரவு மற்றும் பொருளாதார தடையை எதிர்த்து வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியா மீது தீவிர நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். தற்போது …
Read More »அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார்: வடகொரியா
அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார் என்று வடகொரியா, அமெரிக்காவை மிரட்டி உள்ளது. வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு போய்ச்சேரும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் …
Read More »வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம்: டிரம்ப்புக்கு சீன அதிபர் ஆலோசனை
கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டிவரும் வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சீன அதிபர் க்சி ஜின்பிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு …
Read More »