Tag: றெஜினோல்ட் குரே

வடக்கு மாகாண ஆளுநர் காங்கேசன்துறை கடற்படைத்தளத்திற்கு விஜயம்!

வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வடக்கு மாகாண கடற்படைத் தளபதி ஜெயந்த டி சில்வாவின் அழைப்பின் பேரில் காங்கேசன்துறை கடற்படைத்தளத்திற்கு விஜயம் செய்தார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகம் மற்றும் காரைநகர் துறைமுகம் ஆகியவற்றையும் ஆளுநர் பார்வையிட்டுள்ளார். கடற்படையினருடன் கலந்துரையாடிய ஆளுநர் யாழ் குடாநாட்டில் போதைப்பொருள் உள்நுழைவதை தடுப்பதற்கு கடற்படையினர் மேற்கொண்டுவரும் பணிகளை பாராட்டுவதாக இதன்போது தெரிவித்திருந்தார்.

முள்ளிக்குளம் மக்களை சந்தித்த வடமாகாண ஆளுனர்

முள்ளிக்குளம் மக்களை நேரடியாக சந்தித்து போராட்டத்துக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தருவேன் என்று வடமாகாண ஆளுனர் உறுதியளித்துள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று மன்னாருக்கு வருகை தந்த வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே நேற்று மாலை நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மக்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியுள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே […]