கண்டியில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டுள்ளாரென சந்தேகிப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நடைபெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். இதுகுறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் இதுகுறித்த உண்மைகள் அம்பலப்படுத்தப்படுமென மேலும் தெரிவித்தார். கடந்த பெப்ரவரி மாத இறுதிப்பகுதியில் கண்டி தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற …
Read More »ராஜிதவுக்கு எதிரான பிரேரணை வலுவிழப்பு!
சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்ட ரீதியாக வலுவிழந்த ஒரு பிரேரணையாகக் காணப்படுகின்றது என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. கடந்த வியாழக்கிழமை ராஜித சேனாரத்னவுக்கு எதிராக 39 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பொது எதிரணியால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா …
Read More »ராஜிதவுக்கு எதிரான பிரேரணையை சு.க. கடுமையாக எதிர்க்கும்! – எஸ்.பி. திட்டவட்டம்
“சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பொது எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது” என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 15 காரணங்களை உள்ளடக்கி ராஜித சேனாரத்னவுக்கு எதிராக 39 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை பொது எதிரணி கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பித்திருந்தது. அதற்குப் பதிலளித்திருந்த ராஜித சேனாரத்ன, ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல 100 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும் தனது …
Read More »நம்பிக்கையில்லாப் பிரேரணையை கேலி பொருளாக மாற்றிய கூட்டு எதிர்க்கட்சி
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நடைமுறையை கூட்டு எதிர்க்கட்சியினர் கேலி பொருளாக எடுத்துக் கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு …
Read More »‘ட்ரயல் அட்பார்’ யோசனை ராஜிதவின் அப்பாவித்தனத்துக்கு எடுத்துக்காட்டு! – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி
ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ‘ட்ரயல் அட்பார்’ நீதிமன்றம் அமைக்கப்படவேண்டுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறியிருக்கும் யோசனை அவரது அப்பாவித்தனத்துக்கு நல்லதொரு உதாரணமென மஹிந்த அணியான பொது எதிரணியின் உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ராஜித நினைப்பதுபோல தனி நீதிமன்றம் என்பது கிள்ளுக்கீரை வியாபாரமல்ல. தனிநபரொருவர் மீதோ அவரது குடும்பத்தினர் மீதோ …
Read More »மஹிந்த அரசின் மோசடிகள்: ‘ட்ரயல் அட்பார்’ மூலம் விசாரணை! – இனித்தான் அதிரடி நடவடிக்கை என்கிறார் ராஜித
“மஹிந்த ஆட்சியின்போது இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக மேல்நீதிமன்றத்தில் “ட்ரயல் அட்பார்’ முறையில் விசாரணை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது” என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதைச் செய்வதற்கு அரசமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டியதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் …
Read More »ஊழல்களை மறைக்கவே ராஜபக்சர்கள் தொழிற்சங்கங்களை தூண்டி விடுகின்றனர்
கடந்த அரசாங்க காலப்பகுதியில் ஊழல் முறைகேடு மோசடிகளில் ஈடுபட்டோரின் விசாரணைகள் முடிவடைந்துள்ளது. இவர்களை தற்பொழுது கைதுசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடும் எரிபொருள் ஊழியர்கள் தொடர்பில் செய்தியாளர் ஒருவர் கேட்ட …
Read More »டெங்கு நோய்க்கான இரத்தப் பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு!
டெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரண்டு இரத்தப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். டெங்குநோய் ஒழிப்புத் தொடர்பாக நேற்றையதினம் (சனிக்கிழமை) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் இலகுவான முறைகளில் தமது இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டணக் …
Read More »ஞானசார தேரர் பற்றிய ராஜிதவின் கருத்துக்கு சிஹல ராவய கடும் கண்டனம்!
ஞானசார தேரர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்துக்கு சிஹல ராவய கட்சியின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரைக் கைதுசெய்வதற்கான நீதிமன்றப் பிடியாணை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவரைக் கைதுசெய்ய முடியாமல் இருப்பதாக கடந்த புதன்கிழமை டாக்டர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கிறார் எனவும், அவர் உண்மையைப் …
Read More »அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்துக; அரசாங்கத்திடம் கோரிக்கை
ஸ்ரீலங்காவில் பல்வேறு பாகங்களிலும் இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருகின்ற நிலையில் அதனைக் கருத்திற்கொண்டு அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறிவிட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறித்த வைரஸ் தொற்றினால் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு …
Read More »