“மைத்திரி – மஹிந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்கினால் அவர் படுதோல்வியடைவது உறுதி. அதேவேளை, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும்.”இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் எமது கட்சியின் உயர்பீடம் அறிவிக்கும். எவர் களமிறங்கினாலும் ஐக்கிய தேசியக் கட்சிதான் வெற்றிவாகைசூடும்” எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் …
Read More »நாடு திரும்பும் மகிந்த ராஜபக்சே
எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தனது இந்திய பயணத்தை நிறைவு செய்து இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 178 என்ற விமானத்தின் ஊடாக அவர் ஹைய்தராபாத் நகரில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »ரணில்தான் இலங்கையின் பிரதமர்! அதிரடி அறிவிப்பு!!
ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அங்கு யார் பிரதமர் என்ற குழப்பம் உருவாகி உள்ளது. நீடிக்க உள்ளார் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று அந்நாட்டின் …
Read More »இந்தியா வரும் ராஜபக்சேவை வரவேற்கும் சந்திரபாபு நாயுடு
இலங்கையில் நடந்த இறுதிப்போரின்போது லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியாவுக்கு வருகை தருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் ராஜபக்சேவுக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்பு கொடுக்கவுள்ளது தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது. அண்மையில் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அதிபர் சிறிசேனாவின் ஆட்சியே ஆட்டம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. வெகுவிரைவில் இலங்கையில் …
Read More »