மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் […]





