Sunday , June 29 2025
Home / Tag Archives: ரவி கருணாநாயக்க (page 2)

Tag Archives: ரவி கருணாநாயக்க

அமைச்சுப் பதவியை உடனடியாக இராஜிநாமா செய்க! – ரவியிடம் பந்துல வலியுறுத்து

அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாக தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்யவேண்டும் என்று மஹிந்த அணியான பொது எதிரணி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட கடனை அடைப்பதாகக் கூறி இவர்கள் செய்த வேலை என்ன? அது பாரிய கொள்ளையாகும். வரலாற்றில் …

Read More »

ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது! – துமிந்தவை நீக்குவது சு.கவுக்கு நல்லது என்கிறார் டிலான்

“ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்தும் துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்படவேண்டும்” என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது எனவும், துமிந்தவை நீக்குவது கட்சிக்கு நல்லது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “2020இல் தனித்து ஆட்சியமைக்கவேண்டும் என்ற இலக்குடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயணித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், அந்த இலக்கை அடையமுடியாமல் சில தடைகள் …

Read More »

அமைச்சர் பதவியை உடன் துறக்கவேண்டும் ரவி! – பத்தரமுல்ல மகாநாயக்கர் வலியுறுத்து 

உலகின் தலைசிறந்த நிதி அமைச்சர் என்ற விருதைப்பெற்ற முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பிணைமுறி மோசடி நடவடிக்கைகளால் நாட்டுக்குப் பெரும் அவமானத்தையும், தலைக்குனிவையும் ஏற்படுத்தியிருக்கிறார் எனவும், அதனால் அவர் தனது பதவியை உடனடியாகத் துறக்கவேண்டும் எனவும் ஜனசெத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “ரவி கருணாநாயக்கவின் லீலைகள் இந்த அரசு நியமித்த ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே அம்பலமாகியுள்ளன. …

Read More »

டெங்கு ஒழிப்புக்கு உதவி: ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆஸி. வெளிவிவகார அமைச்சர் உறுதி

இலங்கையில் டெங்கு நோயை ஒழிப்பதற்கு அவுஸ்திரேலியா உதவும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் இன்று (20) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்தபோது டெங்கு மற்றும் சிறுநீரக …

Read More »

ரவிக்கு முத்தமிட்டு மகிழ்ந்த மங்கள!

புதிய அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நேற்று தனது புதிய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமான மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட ரவிக்கு, மங்களவின் வாழ்த்துக்கள் முத்தமாகப் போய்ச் சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

நிதியமைச்சர் : அரிசி விலை 66 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க

நிதியமைச்சர் : அரிசி விலை 66 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது   மக்களின் நன்மை கருதி அரிசிக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியினை 66 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் …

Read More »