Thursday , November 21 2024
Home / Tag Archives: ரணில் (page 3)

Tag Archives: ரணில்

நாளை தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்கின்றார் ரணில்

ரணில் விக்கிரமசிங்க

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பிரதமருக்கும் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தான விதம் தொடர்பாக, தமிழ் முற்போக்கு கூட்டணி அதிருப்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த வாரம் பிரதமர் மற்றும் அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ரவி சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அரசாங்கத்துக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற …

Read More »

சம்பந்தனின் சிறையில் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியில் சிறைப்பிடித்துள்ளது. அதன் காரணமாகவே பிரதமர் புதிய அரசியலமைப்பு உட்பட பல்வேறு விடயங்களுக்கு கூட்டமைப்பினருக்கு ஆதரவு வழங்கி வருகின்றார் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். பொதுஜன பெரமுன முன்னணியின் வெற்றி கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலிலே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. 2020 ஆம் ஆண்டு ஒன்றிணைந்த எதிரணியினரே ஆட்சி பொறுப்பினை ஏற்பார்கள். ஐக்கிய தேசிய …

Read More »

ரணில் தலைமையில் கடுமையான தீர்மானம்

ரணில் விக்கிரமசிங்க

சிறிலங்கா அரசாங்கம் சார்ந்த விளம்பரங்கள் தொடர்பில் இறுக்கமான ஒரு நடைமுறையைப் பின்பற்றுவதற்கான யோசனையொன்றுக்கு நேற்றைய தினம் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு அரச விளம்பரங்களை வழங்குவதை குறைக்க திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் இதனை ஒரு யோசனையாக இன்று நடைபெறவுள்ள வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. …

Read More »

சுமந்திரனுக்கு மிகப்பெரிய பரிசு கொடுத்து இன்பத்தில் ஆழ்த்திய ரணில்!

சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி பிரபலத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தக் கோரிக்கையை நிராகரித்த சுமந்திரன் தனது ஆலோசனைக்கமைய தனது செயலாளர் மூலம் அமைச்சின் வேலைகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். …

Read More »

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் களமிறங்க போகிறாரா?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுவேட்பாளரைக் களமிறக்காது என தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க எதிர்ப்பார்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும், அந்த நேரத்தில் பொறுத்தமான வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாம் எங்கள் கட்சியின் தலைவர் ரணில் …

Read More »

ரணில் தலைமையில் ஐ.தே.க அவசர கூட்டம்

ஐ.தே.க கட்சியின் கட்சி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சிறிகொத்தலாவையிலுள்ள ஐ.தே.க. தலைமை காரியாலயத்தில் பிரதமர் ரணில் விக்கரம சிங்க தலைமையில் கூட்டம் கூடவுள்ளது. தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க ஆலோசனை ஒன்று சபையில் முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More »

வெடித்தது அடுத்த பிரச்சனை! கடும் அதிர்ச்சியில் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணம் நடைபெற்றுள்ள நிலையில், அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பதில் இழுபறி நிலை ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களை தாமே தெரிவுசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுசெய்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் நாள் இடம்பெற்ற ஆட்சிக் குழப்பத்தின் பின்னர் அமைச்சுக்களின் செயலாளர்கள் விடயத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னர் இருந்த அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பதிலாக புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனாலும் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் …

Read More »

சர்வதேச சக்திகளுடன் ரணில் பதவியேற்பு

Ranil

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக் கூடாது. அந்த முறைமை நாட்டிற்கு இன்றியமையாதது என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்கி, சர்வதேச சக்திகளின் அனுசரணையுடனேயே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்றிருக்கின்றார். இதனை மக்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் வழங்கிய தீர்ப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்கள் குறித்த மக்கள் அபிப்பிராயத்தை மீள் …

Read More »

ரணில் தரப்பிற்கு இன்று காத்திருந்த அதிர்ச்சிகர முடிவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மஹிந்த தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழுவை நியமிக்குமாறு கோரி ரணில் விகரமசிங்க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உயர்நீதிமன்றம் குறித்த மனுவை நிராகரித்துள்ளது. இந்நிலையில், மஹிந்த தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனு மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் …

Read More »

பிரதமராக ரணில்! உச்சகட்டத்தில் பரபரப்பில் கொழும்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக முக்கிய அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் நீதிமன்றின் தீர்ப்பு வெளியானவுடன் முக்கிய அரசியல் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க …

Read More »