வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகளில் போதியளவு உண்மைத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் இல்லை, தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குறைபாடாக இருக்கின்றது என்கிறார் எம்.ஏ.சுமந்திரன். இவ்விடயம் தொடர்பில் எமது குழு அறிக்கையைத் தயாரிப்பதற்குத் தேவையான தகவல்களைக் கோரியிருந்த போதிலும் நிதியமைச்சு அதற்கு ஒத்துழைக்கவில்லை. தகவல்களை வழங்குவதற்கு அவர்கள் தாமதித்தமையின் காரணமாகவே நாங்கள் அறிக்கை சமர்ப்பிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன், எம்முடைய குழு […]
Tag: ரணிலின்
ரணிலின் கோரிக்கையை மறுத்த அமைச்சரவை
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்க மறுத்துள்ளது.குறித்த ஆணைக்குழுவை அமைப்பதற்காக அனுமதி கோரும் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். எனினும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த முன்மொழிவு தொடர்பாக ஆராய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்தோடு, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், இந்த ஆணைக்குழு […]
கிளிநொச்சியில் ரணிலின் அதிரடி உத்தரவு
வடக்கில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா நிதியுதவி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்து மேற்படி நிவாரண உதவித்தொகையை அதிகரிக்கவும் அவர் முடிவெடுத்துள்ளார். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை உடனடியாக புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களையும் அவர் பணித்துள்ளார். எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு வார காலத்துக்கு தொடர்ந்து உலருணவுப் […]
யாரும் எதிர் பாராத ரணிலின் மற்றொரு அதிரடி அறிவிப்பு!
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உடனடியாக குறைக்கப்படுவதாக பிரதமர் சபையில் சற்று முன்னர் அறிவித்துள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியிருந்தது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும் போதே குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளார். அத்துடன் ஊடகங்கள் மீது பிரதமர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். தற்போது கறுப்பு ஊடகங்கள் தான் நாட்டில் செயற்படுகின்றன. ஜனாதிபதிக்கு நான் அனுப்பாத பெயர்களை கூட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது எவ்வாறு […]
ரணிலின் அதிரடி நடவடிக்கையால் ஆடிப்போன மைத்திரி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கொடுக்கப்பட்ட அமைச்சர்கள் பட்டியலை நிராகரித்த ஜனாதிபதியின் செயலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த களத்தில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு எப்படியாவது அமைச்சுப் பதவியை வழங்க ரணில் புது வியூகம் அமைத்துள்ளதுடன், அவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதற்கான பிரேரணையினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. எவ்வாறாயினும் குறித்த பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி நிராகரித்தாலும் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடிவுசெய்துள்ளதாக […]
இதுவே ரணிலின் பலம்…முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!
மக்களால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இன்று தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு சர்வதேச அழுத்தம் எழுந்துள்ளது. தூதரகங்களின் உதவியுடனும், புலம்பெயர் புலி அமைப்புகளின் உதவியுடனும் தன்னை பிரதமராக நியமிக்க ரணில் அழுத்தம் கொடுக்கின்றனர். இதுவே ரணிலின் பலம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவந்து வடக்கு கிழக்கினை இணைக்க தமிழ் தரப்பு சந்தர்ப்பம் பார்த்து காத்துள்ளனர் […]
ரணிலின் அவசர அறிவிப்பு
அலரிமாளிகையில் தற்பொழுது பரபரப்பு நிலை நிலவுவதாகவும் அவசரமான செய்தியாளர் மாநாடு ஒன்றில் கூறியுள்ளார். இந்த செய்தியாளர் மாநாட்டினை ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாவது.. இதில், ஜனாதிபதி மைத்திர்பால சிறிசேன ஒரு முழுமையான சர்வாதிகாரியாக மாறாமல் அரசியலமைப்பை பின்பற்றவேண்டும் என அவரிடம் கேட்பதாக ரணில் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட அவர், சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் நினைத்தபடி பிரதமரைத் தீர்மானிக்கமுடியாது எனவும் நாடாளுமன்றப் பெரும்பான்மை உள்ள ஒருவரே பிரதமராக நியமிக்கப்படவேண்டும் எனவும் கூறினார். […]
நடக்கப் போவதை பாருங்கள்! ரணிலின் எச்சரிக்கை
சட்டரீதியான அரசாங்கத்தின் கீழ் சட்டரீதியாக நடத்தப்படும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் என பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அதிகாரமின்றி அட்டைபோன்று ஓட்டிக்கொண்டிருப்பவர்களை நீக்க தயார் எனவும் ரணில் எச்சரித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ராஜபக்ச – மைத்திரி தரப்பிற்கு பெரும்பான்மை இல்லை […]
மஹிந்த குறித்து ரணிலின் மிக முக்கிய செய்தி
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஸவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் வழங்கியுள்ள செவ்வியில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதாவது 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமர் ஒருவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு […]
ரணிலின் முக்கியஸ்தர்கள் கொழும்பில் சற்று முன் திடீர் கைது!
ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரப்பெரும மற்றும் கேஷ விதானகே ஆகியோரே சற்றுமுன்னர் அலரி மாளிகைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.





