இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாகவும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். அவருக்கு, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். […]





