இலங்கை அரசியலில் வெள்ளிக்கிழமையென்றால் ஒருவித பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அதுவும் நேற்றைய உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இன்றைய வெள்ளிக்கிழமை (14-12-2018) மிகவும் முக்கியம் வாய்ந்த வெள்ளிக்கிழமையாக இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலையில் பார்க்கப்படுகின்றது. அன்று ஒக்டோபர் மாதம் (26-10-2018) ஜனாதிபதியால் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கிய வெள்ளிக்கிழமையில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இலங்கை அரசியலில் திருப்பங்கள் நடந்தவண்ணமேயுள்ளன. அதையடுத்து நவம்பர் மாதம் (09-11-2018) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானியொன்றை வெளியிட்டார். இதுவும் இலங்கை […]
Tag: மைத்திரி
47 நாட்களில் நாட்டை நாசமாக்க மைத்திரி
கடந்த 47 நாட்கள் நாட்டினையும் நாட்டு மக்களையும் நெருக்கடிக்கு தள்ளி ஜனாதிபதி சூழ்ச்சி செய்துவிட்டார். எவ்வாறு இருப்பினும் உடனடியாக அரசாங்கம் ஒன்றினை அமைத்து இடைக்கால வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்துகின்றது. பாராளுமன்றத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கவும் எமது ஆதரவை வழங்க மாட்டோம் எனவும் அக்கட்சி கூறுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் […]
இன்று வெள்ளிக்கிழமை ஆட்டத்தை ஆரம்பித்தார் மைத்திரி
இலங்கை அணியின் 17 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து பிரதமரோ அல்லது அமைச்சர்களோ இல்லாத நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்க வேண்டிய நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நியூசிலாந்துக்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20, டெஸ்ட் போட்டிகளில் […]
இன்று மாலையின் பின் அவசர அவசரமாக மைத்திரி எடுக்கவுள்ள முடிவு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான மனு மீதான விசாரணையின் தீர்ப்பும் 4மணியளவில் வெளியிடப்படும் எனவும் நீதிமன்றத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையிலேயே தீர்ப்பின் பின்னர் மைத்திரி தலைமையிலான விசேட கூட்டம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மைத்திரிக்கு எதிராக கொழும்பில் வெடிக்கும் போராட்டம்!
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கான சிவில் சமூக அமைப்புகள் நேற்று கொழும்பு லிப்டன் சுற்று வட்டாரத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள், புதிய தலைமுறையினர் , ஜனநாயகம் மற்றும் இலங்கை பெண்கள் அமைப்புக்கள் உட்பட 17 சங்கங்கள ஒன்றினைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இது வரை காலம் தனி தனியாக ஆர்ப்பாட்டம் முற்கொண்ட சங்கங்கள் […]
மைத்திரிதான் இரகசிய வாக்குறுதி தந்தார்! மகிந்த
நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைமைக்கு என்னை காரணம் சொல்லாதீர்கள். இவையெல்லாம் ஜனாதிபதி மைத்திரிபாலவின் முடிவினாலேயே ஏற்பட்டன. பிரதமராக என்னை நியமியுங்கள் என்று நான் கேட்கவில்லை. அவர்தான் என்னை அழைத்தார். நீங்களே இதற்கு பொருத்தமானவர் என கூறி, பதவியேற்கச் சொன்னார்“ இப்படி கூறி, அரசியல் குழப்பத்திற்கான முழுமையான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபாலவின் பக்கம் தட்டிவிட்டுள்ளார், சில வாரம் பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச எம்.பி. வெளிநாட்டு ஊடகமொன்றின் கொழும்பு […]
பரபரப்பாகிறது கொழும்பு! மைத்திரியின் அவசர நடவடிக்கை!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் முக்கியமான சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான உயர் நீதிமன்ற விசாரணைகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக கூட்டணியின் அரசியல் நபர் ஒருவர் கூறியுள்ளார். இதேவேளை நேற்றையதினம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாயினும் அதனை தாம் ஏற்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மைத்திரியின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்?
ஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உள்ளடங்கிய வீடியோவை கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளதென கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகமானதன் காரணமாகவே மகிந்த ராஜபக்ஸவினால் பெரும்பான்மையை காண்பிக்க முடியவில்லை எனவும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கு 500 மில்லியன்வரை கோரினர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்ட ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலைமைகள் குறித்து தனக்கு நன்கு தெரியும் எடினவும் […]
தலைவராகிறார் மஹிந்த : விட்டு கொடுப்பாரா மைத்திரி
பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று இரவு இரவு 7 மணியளவில் நடைபெற்ற போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆலோசகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்கள் வரவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்திருந்தார். மேலும், மஹிந்த […]
மைத்திரிக்கு நெருக்கமானவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒவ்வாமை பிரச்சினை ஒன்று இருப்பதாக, அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை ஒரு வாரத்தில் தீர்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் இதில் எனக்கு நம்பிக்கையில்லை. 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் […]





