கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகள் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற காணி விடுவிப்பு குறித்த உயர்மட்ட கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த வாரம் […]





