முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் தொடர்பில் கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட அமெரிக்க சமஷ்டி நீதிபதி பகிரங்கப்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வகிபாகம் தொடர்பில் விசாரிக்குமாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு …
Read More »மீண்டும் அமெரிக்கா பறக்கிறார் கோத்தா
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளார் என்று கூறப்படுகிறது. வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தயாராகி வரும் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாக கூறியிருந்தார். எனினும், அவர் இன்னமும் அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருக்கின்ற நிலையில், இம்மாத பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார். டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியகத்தை அமைப்பதற்கான நிதியில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச தற்போது, சிறப்பு மேல்நீதிமன்றத்தில் …
Read More »தேசிய சொத்துகளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கியதே சாதனை : கோட்டா
இலங்கையின் தேசிய சொத்துக்களை சீனாவிற்கும், இந்தியாவிற்கும் வழங்கியதன் மூலம் அவ்விரு நாடுகளினதும் அதிகாரப் போராட்டத்திற்கு நல்லாட்சி அரசே அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். குளியாபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போNது அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”போலியான காரணங்களை சுட்டிக்காட்டி அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்தல விமான நிலையம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. …
Read More »காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன் “இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் – சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூறவேண்டியவர். அதிலிருந்து தப்பிப்பதற்காகவே சரணடைந்தவர்களைக் கண்டவர்கள் எவருமில்லை என்று கதை சொல்கின்றார்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போரின் இறுதிக்கட்டத்தில் …
Read More »