தான் கூறிய விடயங்களை செயற்படுத்தியிருந்தால் பல உயிர்களை காவுகொண்ட மீதொட்டமுல்ல அனர்த்தம் அரங்கேறியிருக்காது என உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கண்டி கொஹகொட குப்பை மேடும் சரியும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு சென்றிருந்த வேளையிலே அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ”மீதொட்டமுல்லையை போன்று அனர்த்தம் ஒன்று கொஹகொட […]
Tag: மீதொட்டமுல்ல அனர்த்தம்
மீதொட்டமுல்ல அனர்த்தம்: ரணிலிடம் வியட்நாம் ஜனாதிபதி அனுதாபம் தெரிவிப்பு
மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பாக இலங்கை மக்களுக்கும் அரசுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக வியட்நாம் சோஷலிசக் குடியரின் ஜனாதிபதி டிரன் டய் குவனும், வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் குயென் பு டொங்கும் தெரிவித்துள்ளனர். இந்த உணர்வுபூர்வமான சந்தர்ப்பத்தில் வியட்நாம் மக்களும், அரசும் தமது உள்ளங்களால் இலங்கையுடன் ஒன்றாக இணைந்திருப்பதாக வியட்நாம் ஜனாதிபதியும், கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று செவ்வாய்க்கிழமை […]
மீதொட்டமுல்ல அனர்த்தம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இரா. சம்பந்தன் இரங்கல்
மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஏப்ரல் 14 ஆம் திகதி இடம்பெற்ற துரதிஷ்ட சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இன்று அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவமானது நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைகளை பாதித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் […]





