சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் அதி உயர் வலுகொண்ட நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின் பேரணி ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் செல்வதற்கு முற்பட்ட போது, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நீடித்த சர்ச்சை காரணமாக, குறித்த கல்லூரியை அரசாங்கம் […]





