Tag: மஹிந்த

சம்பந்தனின் பதவி பறிபோனது! குதூகலத்தில் மஹிந்த

நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. அதேநேரம் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இத்துடன் நாடாளமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்தராஜ பக்சவும், எதிர்க்கட்சி அமைப்பாளராக மஹிந்த அரவீரவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மஹிந்த தரப்பினர் சுதந்திரக்கட்சியிலிருந்து நீங்கியதால் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கக் […]

புதிய அரசாங்கத்தில் ஊடகங்களிற்கு ஆபத்து மஹிந்த எச்சரிக்கை

புதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுமென்றும், ஒவ்வொரு ஊடகங்களையும் தனித்தனியாக கண்காணிக்கும் வகையில் அமைச்சு பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள அவரது கால்டன் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “புதிய அரசாங்கத்தில் நாடு துண்டாடப்படும் அதிலிருந்து ஊடகத்துடன் இணைந்து நானும் நாட்டை பாதுகாப்பேன். நாங்கள் ஆட்சி செய்த காலத்தில் […]

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 101 பேர் மன்றில் காணப்படுகின்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்தவிற்கு வழங்க வேண்டிய நிலை சபாநாயகருக்கு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார். மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் வைத்து இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மஹிந்த […]

மஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு

மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மஹிந்த தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழுவை நியமிக்குமாறு உயர்நீதிமன்றில் மனுத்தால் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் புதிய அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கெதிராக மஹிந்த தரப்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரிக்கப்பட்டு நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதிமன்ற […]

மஹிந்தவிற்கு இன்று நீதிமன்றத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சர்களுக்கும் பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக தாக்கல் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, மனு மீதான விசாரணையை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு சட்டவிரோதமானது என்று […]

மஹிந்தவே இலங்கைக்கு பிரதமர்!

உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது செயற்பட மைத்திரி – மஹிந்த தரப்பு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லை என்ற வாதத்தை முன்னிறுத்தி அரசாங்கத்தை முன்னெடுத்துச் […]

மைத்திரி மஹிந்த

மஹிந்த – மைத்திரிக்கு எதிராக மேற்குலக நாடுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மொரட்டுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே புதிய பிரதமரையும், அரசையும் நியமித்தார். அதற்கு எதிராக மேற்குல நாடுகளின் தூதுவர்கள் […]

மைத்திரி மஹிந்த

தலைவராகிறார் மஹிந்த : விட்டு கொடுப்பாரா மைத்திரி

பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று இரவு இரவு 7 மணியளவில் நடைபெற்ற போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆலோசகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்கள் வரவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்திருந்தார். மேலும், மஹிந்த […]

சபாநாயகர் – மஹிந்த எதிர்பாராத சந்திப்பு

சபாநாயகர் கரு ஜயசூரியவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்று நேரில் எதிர்பாராமல் சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவின் தந்தையாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ, பொரளை தனியார் மலர்ச்சாலையில் சபாநாயகரை எதேச்சையாக சந்தித்தார். இதன்போது சபாநாயருக்கு அருகில் அமர்ந்திருந்து சில நிமிடங்கள் மஹிந்த அளவளாவியுள்ளார். எனினும், பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை.

பறிபோனது மஹிந்தவின் பிரதமர் பதவி

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக பதவியினைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன் அவர் தலைமையிலான அமைச்சரவை இயங்கமுடியாதெனவும் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி உள்ளடங்கலாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை இன்றைய தினம் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடை விதித்தது. சம்மந்தப்பட்ட மனுவின் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு […]