புதிய அரசமைப்பொன்றை இயற்றும் தேசிய அரசின் முயற்சியைத் தோற்கடிப்பதற்கு இருமுனைத் தாக்குதலை நடத்துவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது. சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொது எதிரணி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் கூடினர். கொழும்பு, விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில், அரசமைப்பு மீளமைப்பு பணி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், வெளிநாட்டுப் பிரமுகர்களில் இலங்கைப் …
Read More »ஆட்சிக் கவிழ்ப்பே தீர்வு! – மஹிந்த கூறுகின்றார்
“நாட்டின் தற்போதைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நானே கடும் அதிருப்தியில் உள்ளேன்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நாட்டை மீட்ட பாதுகாப்புத் தரப்பினர் இப்போது கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்படுகின்றனர். அரசுக்கு என்ன செய்வதென்று தெரியாதுள்ளது. இதனால்தான் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது.தற்போதைய அரசின் இராணுவ வேட்டையை நிறுத்துவதற்கு ஆட்சிமாற்றம்தான் ஒரே வழி. நாட்டின் தற்போதைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் …
Read More »அரசியல் பழிவாங்கலை இலக்குவைத்தே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சட்டமூலம்! – மஹிந்த தெரிவிப்பு
பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டமூலத்தை அரசு கொண்டுவர முயற்சிசெய்வதற்கு முக்கிய காரணம் அரசியல் பழிவாங்கலைத் தவிர வேறில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டமூலம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்திருக்கும் கருத்தை அரசு கவனத்தில்கொள்ளவேண்டும். மகாநாயக்க தேரர்களின் கருத்தை உதாசீனம் செய்யக்கூடாது. நாட்டின் நன்மை கருதியே அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர். …
Read More »தேசிய அரசுடன் மஹிந்த இணைந்தால் நல்லதாம்! – அமைச்சர் வசந்த
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேசிய அரசுடன் இணைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாட்டைத் துரிதமாக முன்னேற்றிவிடலாமே.” – இவ்வாறு ஆசைப்படுகின்றார் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இந்தத் தேசிய அரசில் அனைவரும் இணைந்து இந்த நாட்டின் அபிவிருத்திக்காக வேலை செய்யவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தகூட எம்முடன் இணையவேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். மைத்திரி அணி, …
Read More »சர்வதேச நீதிபதிகள் இலங்கை வருவது உறுதி! – கூறுகின்றார் மஹிந்த
“நாட்டை இரண்டாகப் பிரிக்கும் புதிய அரசமைப்பும், படையினரைத் தண்டிக்கும் சர்வதேச நீதிபதிகள் குழுவும் வரப்போவது உறுதி” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த எமது நாடு இன்று பயங்கரமான ஒரு நிலைமையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தின் சதி வலைக்குள் சிக்கி நாடு இப்போது சீரழிந்துகொண்டிருக்கின்றது. நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. புதிய அரசமைப்பு நாட்டை இரண்டாகப் …
Read More »மைத்திரி – ரணில் அரசுக்கு வெகுவிரைவில் அதிர்ச்சி வைத்தியம் என்கிறது மஹிந்த அணி! – திருமலையில் இன்று ஆர்ப்பாட்டம்
சீனன்குடாவிலுள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஒயில் நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் திட்டத்தை எதிர்த்தும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்தும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் இன்று திங்கட்கிழமை திருகோணமலையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர். “இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்வதற்கு அதிகளவான தமிழ், முஸ்லிம் மக்களும் ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே, மேற்படி எதிர்ப்புப் பேரணியின் பின்னர் மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசுக்கு பல வழிகளிலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்படும்” …
Read More »மஹிந்த பாகிஸ்தான் விஜயம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு நாளை விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு உரையாற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் 2017 தேசிய பாதுகாப்பு மற்றும் யுத்தம் தொடர்பிலான மாநாட்டில் இவர் உரையாற்றவுள்ளார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்கான பல்கலைக்கழகத்தின் தலைவரான லெப்டினன் ஜெனரல் ரிஸ்வான் அக்தாரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Read More »போர்க்குற்ற விசாரணையை ஏற்கமறுத்தே ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை கைவிட்டோம்! – தனது ஆட்சியை நியாயப்படுத்தி மஹிந்த அறிக்கை
“படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட காரணிகளுக்கு இணங்கமுடியாததன் காரணமாகவே தனது அரசு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை கைவிட்டது” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு தனது ஆட்சியின்போது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததை நியாயப்படுத்தி அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- “ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஐரோப்பிய …
Read More »சு.கவின் மே தினக் கூட்டத்துக்கு மஹிந்தவுக்கும் அழைப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு வருகை தருமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கவுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி கெட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும், மே தின வரலாற்றில் …
Read More »புலிகளில் கவனம் செலுத்தியதால் குப்பையில் கவனம் செலுத்தவில்லை – மகிந்த சொல்கிறார்
யுத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியமையினாலேயே மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக கவனத்தினைச் செலுத்த முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஸ்ரீமகா விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் நாட்டினது பிரதானமான பிரச்சினையிலேயே அதிக கவனத்தினைச் செலுத்தியிருந்தோம். அதன்படி யுத்தத்தினையும் நிறைவுக்கு கொண்டுவந்திருந்தோம். …
Read More »