மாகாண சபை தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் நடத்துவதற்கான பிரேரணை இதுவரை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படாமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இன்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து வரவு செலவுத்திட்டம் மீதான […]
Tag: மஹிந்த அணி
மஹிந்த அணியிலிருந்து 15 பேர் ரணிலுடன் இணைவு
மஹிந்த அணியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் இணைய உத்தேசித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் இணைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க அந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுப்புத் தெரிவித்திருந்தார். இது […]
மைத்திரியின் மனநிலையை அம்பலப்படுத்திய மஹிந்த அணி
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு போதும் நியமிக்கமாட்டார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “வரலாற்றிலேயே முதன் முறையாக ஆளுங்கட்சி இல்லாமல் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது எமது நாட்டில் மாத்திரமே ஆகும். நாடாளுமன்றத்தில் நடுநிலைமையாக செயற்பட வேண்டிய சபாநாயகர் […]
அதிரடி சவால் விடுத்த சபாநாயகர்!
சபாநாயகர் கரு ஜயசூரிய, மஹிந்த அணியினருக்குச் சவால் விடுத்துள்ளார். சபாநாயகர் பதவிக்குத் தான் பொருத்தமில்லை என்றால், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு, சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமக்கு கூடுதல் ஆசனங்களைத் தர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விடுத்த கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா 5 ஆசனங்கள் வீதம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஐக்கிய மக்கள் […]
மஹிந்த அணியிலிருந்து விலகி எவரும் அரசுடன் இணையமாட்டர்! – நல்லாட்சியின் பகற்கனவு பலிக்காது என்கிறார் செஹான் சேமசிங்க
மஹிந்த அணியான பொது எதிரணியில் இப்போது பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கின்றது எனவும், வெகுவிரைவில் அந்த அணியிலுள்ள ஏழு உறுப்பினர்கள் விலகி அரசுடன் சேர்ந்துகொள்ளப்போகின்றனர் எனவும் வெளிவந்திருக்கும் செய்தி வெறும் கற்பனையே எனவும், இவ்வாறு அரசு அடிக்கடி காணும் பகற்கனவுகள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை எனவும் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார பொது […]
சுகாதார அமைச்சின் தகவல்கள் பொய்! மூன்று இலட்சம் பேருக்கு டெங்கு!! – மஹிந்த அணி விளக்கம்
இலங்கையில் இப்போது சுமார் 71 ஆயிரம் டெங்கு நோயாளிகளே இருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் தகவல்கள் அப்பட்டமான பொய் எனவும், மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இந்த நோய் தொற்றியுள்ளது என்பதே உண்மை எனவும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளவில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த பிரசன்ன ரணதுங்க எம்.பி. மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “அரசின் மிகப் பலவீனமான நடவடிக்கைகளால் டெங்கு நோய் […]
இலங்கையைக் காப்பாற்ற மைத்திரி அரசை உடன் கவிழ்த்தே ஆகவேண்டும்! – வலியுறுத்துகின்றார் விமல்
“புதிய அரசமைப்பின் ஊடாக சமஷ்டி கொடுக்கப்படுவதற்கு முன் எட்கா ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் தாமதிக்காமல் உடனே மைத்திரி அரசைக் கவிழ்க்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த நாடான இலங்கையைக் காப்பாற்ற முடியாது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “எமது நாட்டிலுள்ள தொழிலாளர்கள், வர்த்தகர்கள், சிறுபான்மை இன மக்கள் மற்றும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் […]
பொருளாதாரப் பின்னடைவுக்கான முழுக்குற்றத்தையும் ரவியின் மீது சுமத்த முடியாது என்கிறது மஹிந்த அணி!
இலங்கையின் பொருளாதாரப் பின்னடைவுக்கான முழுக் குற்றத்தையும் முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவின் மீது சுமத்தமுடியாதென மஹிந்த அணியான பொது எதிரணியின் பேச்சாளரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பொறுப்புகளை சரிவர நிர்வகிக்கவில்லை என்பது தெரிந்த விடயமே என்றபோதிலும் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு அவரே அடிப்படைக் காரணம் என்று கூறமுடியாது. அரசின் பலவீனமான பொருளாதாரக் […]
ஜனாதிபதியாகும் கனவு பஸிலுக்கு இல்லை என்கிறது மஹிந்த அணி!
“ஜனாதிபதியாகும் கனவில் பஸில் ராஜபக்ஷ இல்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் பஸில் உடனே நாட்டைவிட்டு வெளியேறிவிடுவார்.” – இவ்வாறு மஹிந்த அணியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “எமது அணியின் சார்பில் பஸில் ராஜபக்ஷதான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகின்றது. உண்மையில், ஜனாதிபதியாகும் கனவில் அவர் இல்லை. […]
நாடு கடந்த தமிழீழ அரசு – மஹிந்த அணி இடையே ஜெனிவாவில் கடும் சொற்போர்!
நாடு கடந்த தமிழீழ அரசு – மஹிந்த அணி இடையே ஜெனிவாவில் கடும் சொற்போர்! மஹிந்த அணியின் குழுவினருக்கும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஜெனிவாவில் கடும் மோதல் இடம்பெற்றது. இந்த மோதல் காரணமாக, சரத் வீரசேகர ஏற்பாடு செய்திருந்த பக்க நிகழ்வு இறுதியில் அவராலேயே கலைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான போர்க்குற்றச்சாட்டு ஆதாரங்களுடன், மஹிந்த அணியினர் ஜெனிவாவை களமிறங்கியுள்ளனர். முன்னாள் கடற்படைத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான […]





