மூதூர் – பெரியவெளி, மல்லிகைத்தீவில் மூன்று பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அங்கு பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் மாலைநேர (பிரத்தியேக) வகுப்புக்குச் சென்ற மூன்று மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். மல்லிகைத்தீவு பாடசாலை கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்களுள் சிலர் இம்மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் என்று அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர்கள் உடனே தலைமறைவாகினர். அவர்களுக்கு …
Read More »