Tag: மட்டக்களப்பில்

மட்டக்களப்பில் பதற்றத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிகளின் மரணம்!

மட்டக்களப்பு- வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுணதீவு வீதித்தடையில் காவலில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் மீது இனந் தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் உயிரிழந்துள்ளனர். வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் . பிரசன்னா […]

மட்டக்களப்பில் மணல் அகழ்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

மணல் அகழ்வைக் கண்டித்தும், வனப் பகுதிகளில் மரம் வெட்டுவதை தடுக்குமாறு கோரியும் மட்டக்களப்பு – வேப்பவெட்டுவான் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலுப்பையடிச்சேனை, வேப்பவெட்டுவான் மற்றும் பாலர்சேனை கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்றன. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பிரதேசத்தில் 45 பேருக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை 9 மணல் வியாபாரிகள் நடத்துகின்றனர். நாங்கள் வறுமையில் வாடும் […]

மட்டக்களப்பில் ஆயிரம் இளைஞர்களுக்கு உற்பத்தித் தொழிற்துறைக்கான பயிற்சி: ஸ்ரீபத்மநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் சுமார் ஆயிரம் இளைஞர்களுக்கு உற்பத்தித் தொழிற்துறைக்காக பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறிகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். […]