Tag: மங்கள சமரவீர

அமுலுக்கு வருகிறது புதிய வரிமுறை

புதிய வரி முறையின் மூலம் நாட்டின் வியாபார சூழலை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய உள்நாட்டு வருவாய் சட்டம் குறித்து நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற பொது விழிப்புணர்வு கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகாரம் பெற்ற புதிய உள்நாட்டு வருவாய் சட்டமானது, முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் […]

காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கும் சட்டமூலம் அனைத்து பிரஜைளுக்குமான மனித உரிமை

காணாமல் போவதைத் தடுப்பது தொடர்பான சட்டமூலத்திற்கு அரசியல் ரீதியில் இரட்டைக் கொள்கையை கடைப்பிடிக்கும் தரப்பு எதிர்ப்புத் தெரிவிப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒரு சட்டமூலம் நியாயமான சுதந்திரமான ஒழுக்கமுள்ள சமூகத்தில் அனைத்து பிரஜைகளுக்கும் உரிய ஒரு மனித உரிமையாகும். இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் பிறந்து வாழும் அனைவரும் பலவந்தமான கடத்தலுக்கோ , காணாமல் ஆக்கப்படும் செயற்பாட்டிற்கோ, முறையற்ற சிறை வைப்பிற்கோ […]

ரவிக்கு முத்தமிட்டு மகிழ்ந்த மங்கள!

புதிய அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நேற்று தனது புதிய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமான மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட ரவிக்கு, மங்களவின் வாழ்த்துக்கள் முத்தமாகப் போய்ச் சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

25 மில்லியன் ரூபா செலவில் வெசாக் பண்டிகையை கொண்டாடிய மஹிந்தவின் மனைவி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான, முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, யுனெஸ்கோவின் ஏற்பாட்டில் பரிஸில் நடைபெற்ற வெசாக் பண்டிகையை பார்வையிடுவதற்கு 25 மில்லியன் ரூபா செலவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு பரிஸ் சென்றபோது ஷிரந்தி ராஜபக்ஷ தங்கியிருந்த ஹோட்டலின் அறை ஒன்றுக்கான ஒரு நாள் வாடகை, 63 […]

சித்திரவதைக் குற்றங்களை இலங்கை - மங்கள சமரவீர

சித்திரவதைக் குற்றங்களை இலங்கை ஏற்றுக்கொள்கின்றது – மங்கள சமரவீர

சித்திரவதைக் குற்றங்களை இலங்கை ஏற்றுக்கொள்கின்றது – மங்கள சமரவீர இலங்கையில் இடம்பெற்றுவரும் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை மிகவும் அவதானத்துடன் கையாள்வதற்கு முயற்சிக்கின்றோம் என ஐ.நா. கூட்டத்தொடரில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அத்தோடு சித்திரவதைகளை சிறிதளவும் சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை அரசு பின்பற்றுகின்றது என்றும் குறிப்பிட்டார். மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அமைப்புக்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்ட […]

ஐ.நா அமர்வு நாளை ஆரம்பம்

ஐ.நா அமர்வு நாளை ஆரம்பம் : மங்கள தலைமையிலான குழு ஜெனிவா பயணம்

ஐ.நா அமர்வு நாளை ஆரம்பம் : மங்கள தலைமையிலான குழு ஜெனிவா பயணம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் இன்று ஜெனிவா பயணமாகின்றனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இருவரும் ஜெனிவா அமர்வில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த […]