Tag: மகஸின் தமிழ் அரசியல் கைதிகள்

தமிழ் அரசியல் கைதிகளை கைவிடுவதானது தமிழர் அரசியலை கைவிடுவதற்கு சமனாகும்!

தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி உடன் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசுக்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு அரசியல் நோக்கங்களுக்காக மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டு அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்தனர். இந்தச் சந்திப்பு […]

விநாயகமூர்த்தி மறைவு: மீட்பரை இழந்து தவிக்கின்றோம்! – தமிழ் அரசியல் கைதிகள் கவலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான  அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறைவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:- “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஐயாவின் இறப்புச் செய்தி அறிந்த நாம் ஆறாத்துயர் கொண்டு விழி கசிகின்றோம். தமிழ் அரசியல் கைதிகள் ஆகிய எமது பார்வையில் […]