புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் கிணறு ஒன்றிற்குள் இருந்து நேற்றையதினம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றில் இருந்து இரண்டு கைக்குண்டுகள், ஆர்.பி.ஜி எறிகணைகள், தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அவற்றை செயலிழக்க செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை விடுதலைப்புலிகளின் காலத்தில் பாவனையில் இருந்த வெடிபொருட்களே அவை எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »புலிகளின் தொழிநுட்பத்தில் உருவாகிய கடற்கலன் தற்போதும் முள்ளிவாய்க்காலில்
விடுதலைப் புலிகளின் தொழிநுட்பத்தில் உருவாகிய கடற்கலன் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் காணப்படுகின்றது. எனினும் இறுதி யுத்தத்தின் போது குறித்த கடற்கலன் இலங்கை விமான படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் யுத்த காலத்தில் இலங்கை விமான படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்த விடுதலைப் புலிகளின் தொழிநுட்பத்தில் உருவாகிய குறித்த கடற்கலன் 10 வருடங்கள் கடந்த நிலையிலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் தற்பொழுதுவரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »புலிகளின் போர்முறையை விட இது வித்தியாசமானது!
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தகவல்களை பரிமாறிக் கொள்வதில் நிலவிய சிக்கல் தொடர்பில் அதிகாரிகள் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர். தற்போது தீவிரவாதிகளை கைது செய்யவும், தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதுவரை இலங்கையர்களுடன் தொடர்புடைய அமைப்பு ஒன்று சர்வதேச அமைப்பு ஒன்றுடன் தொடர்பினை வைத்துள்ளது. இந்த …
Read More »