அதிகாரப் பகிர்வு தொடர்பான இறைமையதிகாரம் மக்களையே சாருமென குறிப்பிட்டுள்ள பிரதமரும் அரசியல் யாப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, இதுகுறித்து மக்களே தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை நீக்கப்படாதென மீண்டும் வலியுறுத்திய பிரதமர், அதே சந்தர்ப்பத்தில் ஏனைய […]





