“புதிய அரசமைப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு நான் எதுவும் விளக்கமளிக்கவில்லை. அதற்கு இன்னமும் காலஅவகாசம் உள்ளது. ஆனாலும் பாதுகாப்பு, பொருளாதார, சிநேகபூர்வ விடயங்கள் குறித்துப் பேசினோம். பிராந்திய அரசியல் குறித்தான விடயத்தில் இந்தியா தெளிவாக உள்ளது. அதனால்தான் எங்களுடன் நெருக்கமாகவும் உள்ளது. கொழும்பை புதுடில்லி நன்கு புரிந்துவைத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதற்கான உத்தரவாதத்தை என்னிடம் தந்தார்.” – இவ்வாறு கருத்து வெளியிட்டார் வெளிவிவகார அமைச்சர் திலக் …
Read More »புதிய அரசமைப்பு மீது நவம்பரில் சர்வஜன வாக்கெடுப்பு!
புதிய அரசமைப்பு மீது எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அந்தக் காலஎல்லையை இலக்குவைத்து புதிய அரசமைப்பை தயாரிக்கும் பணியை விரைவுப்படுத்தியுள்ள அரசு, இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. புதிய அரசமைப்பை 2017 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுமீது இராஜதந்திர மட்டத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றாவிட்டால் இனி …
Read More »இடைக்கால அறிக்கை 21ஆம் திகதி வெளியாகும்! – அரசமைப்புப் பேரவையாக நாடாளுமன்று அன்று கூடும்
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக இதுவரை செயற்பட்ட அரசமைப்புப் பேரவையின் வழிகாட்டல் குழு, சுமார் எழுபதுக்கும் அதிகமான தடவைகள் கூடித் தயாரித்த இடைக்கால அறிக்கை, நீண்ட இழுபறிக்குப் பின்னர் முழு அளவில் இறுதி செய்யப்பட்டு, குழுவின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாகக் கூடும்போது அங்கு உறுப்பினர்கள் அனைவருக்கும் அது சமர்ப்பிக்கப்படும். அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டடல் குழு கொழும்பில் எழுபத்து மூன்றாவது தடவையாக பிரதமர் ரணில் …
Read More »வலுக்கின்றது சு.கவின் உட்கட்சிப்பூசல்! கேள்விக்குறியில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை!!
புதிய அரசமைப்பு, 20ஆவது திருத்தச் சட்டமூலம் என முக்கிய சில அரசியல் நகர்வுகளுக்குச் செல்லவேண்டிய சூழலில் தேசிய அரசின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது என அரசின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது தேசிய மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கெம்பல் பார்க்கில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பொது எதிரணியிலுள்ள எவரும் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை, தனக்கு அழைப்பில் கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி …
Read More »புதிய அரசமைப்பை பெரும்பான்மையுடன் நிறைவேற்றியே தீருவேன்! – மைத்திரி திட்டவட்டம்
“புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு அது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என நம்பகரமாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விவசாய அமைச்சால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சிநிலை கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பங்கேற்றார். கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது கிழக்கு மாகாண சபையின் அரசியல் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து …
Read More »மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சியைக் கவிழ்க்க தென்னிலங்கையில் சதி! -கூட்டமைப்பு குற்றச்சாட்டு
“தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசுடன் நாம் தொடர்ந்து பேசிவருகின்றோம். இந்நிலையில், இந்த ஆட்சியைக் கவிழ்க்க தென்னிலங்கையில் சதி முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள்முதல் அரசியல் பிரச்சினைகள்வரை அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும், …
Read More »25 பக்கங்களாக குறைந்த இடைக்கால அறிக்கை! – அதுவே நாடாளுமன்றுக்கு வரும்
புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு தனது இடைக்கால அறிக்கையை 35 பக்கத்திலிருந்து 25 பக்கமாகக் குறைத்து இறுதி செய்துள்ளது. 25 பக்கமாகக் குறைக்கப்பட்ட இடைக்கால அறிக்கையே அரசியல் நிர்ணய சபையில் (நாடாளுமன்றத்தில்) சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரம் வழிநடத்தல் குழுவின் கூட்டம் 3 தினங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் பக்க எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் அதனைக் குறைக்கவேண்டும் என்ற யோசனை இறுதிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. …
Read More »சர்வகட்சிப் பேரவையை அமைக்கிறார் மைத்திரி!
புதிய அரசமைப்புத் தொடர்பில் பெளத்த மகா நாயக்க தேரர்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து சர்வகட்சிப் பேரவை ஒன்றைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அரசமைப்புப் பேரவையாக மாறியுள்ள நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படும் புதிய அரசமைப்பு வரைவுத் திட்டத்திற்குச் சர்வகட்சிப் பேரவையின் ஊடாக அனுமதி பெற்றுக் கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என்றும் – அரசமைப்பு யோசனைகள் தயாரிக்கப்பட்டதும் சர்வ கட்சிப் பேரவை கூட்டப்படும் என்றும் கூறப்பட்டது. நாடாளுமன்றைப் பிரதிநிதித்துவம் …
Read More »புதிய அரசமைப்பு மிகவும் அவசியம்! – சிங்கள மக்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்கிறது ஐ.தே.க.
புதிய அரசமைப்பு நாட்டுக்கு மிகவும் அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார். “பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படமாட்டாது. சிங்கள மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான் அரசமைப்பு தயாரிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “இன்னும் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படவில்லை. அதில் அடங்கப்போகின்ற விடயங்கள் பற்றி எதுவும் தெரியாமல் பொய்யான …
Read More »புதிய அரசமைப்பு: அஸ்கிரிய பீடத்தின் எதிர்ப்பானது தமிழர் மீதான பல்குழல் தாக்குதல்! – சபையில் சிறிதரன் எம்.பி. சீற்றம்
“புதிய அரசமைப்புக்கு அஸ்கிரிய பீடம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், இது தமிழர் மீதான பல்குழல் தாக்குதலாகும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாவற்குழியில் சிங்கள மக்கள் வாழவே இல்லை. இருந்தும் அங்கு வலுக்கட்டாயமாக …
Read More »