முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மஹிந்த அணியான பொது எதிரணி கொண்டுவந்தால் அதற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கத் தீர்மானித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதியும் பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகவும் செயற்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸில் நீதிமன்றில் கடந்த வாரம் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதிக்கட்டப் போரில் ஜெனரல் […]
Tag: பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
ஜகத் ஜயசூரிய போர்க்குற்றவாளி! ஆதாரங்கள் என் வசம்; தண்டனை அவசியம்!! – பொன்சேகா வலியுறுத்து
“போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை கட்டாயம் தண்டிக்கவேண்டும். இராணுவ உடை அணிந்ததற்காக குற்றமிழைத்தவருக்கு தண்டனை வழங்காது இருக்கமுடியாது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பிலான சான்றுகள் என்னிடம் உள்ளன. உரிய நீதி விசாரணை ஆரம்பிக்கப்பட்டால் அங்கு சாட்சியங்களை சமர்ப்பிக்க நான் தயாராகவுள்ளேன்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிராந்திய அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் […]
சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புடன் தொடர்புடைய புதிய பதவி
சிறிலங்காவின் முப்படைகளுடனும் இணைந்து செயற்படும் வகையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதியதொரு பதவியை உருவாக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாக, அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய வகையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள பதவியை பீல்ட் மார்ஷல் சரத் […]





