பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பேன் என சைகையால் அச்சுறுத்திய இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்கரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னர் அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் , அவர் முன்னிலையாகாத […]





