Tag: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

ஐ.தே.க.வை கவிழ்க்க முடியாது!

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போது இடம்பெற்ற வண்ணமே உள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் வரை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரளதெரிவித்தார். பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் அதுகோரள மேலும் […]

மஹிந்தவின் பதவியை பறிக்க சதித்திட்டம் தீட்டும் அமெரிக்கா!

இலங்கையின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து அகற்றவதற்கு அமெரிக்க பல சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் ரஷ்யாவிற்கான தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்யா- மொஸ்கோவில் இருந்து மின்னஞ்சல் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடாக மஹிந்தவிடம் குறித்த மின்னஞ்சலை ஒப்படைக்கும் விதமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்தவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதித்திட்டத்தை அமெரிக்கா, கொழும்பிலுள்ள தனது தூதுவரத்தின் […]

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஐ.தே.கட்சியின் தீர்மானம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பது என ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது. அரசியல் தொடர்பில் அக்கறை காட்டி வரும் பலரும் எதிர்பார்த்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன் போதுஇ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்இ ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது. எதிர்ப்பார்க்கும் வகையில் மறுசீரமைப்பு […]

ஐ.தே.க. எம்.பிக்களுக்கு வெளிநாடு செல்லத் தடை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள அனைத்து எம்.பிக்களும் சபையில் பிரசன்னமாகவேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ ஏப்ரல் முதல் வாரத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும்இ மருத்துவ தேவைகளுக்காக செல்வோர் முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் பிரதமர் உட்பட ஐ.தே.கவிலுள்ள மூத்த அமைச்சர்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீது […]

நம்பிக்கையில்லா பிரேரணை ஒருபோதும் வெற்றியளிக்காது – சந்திரிகா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நல்லாட்சி அரசின் ஐந்து வருட காலங்கள் பூர்த்தியடையும் வரை எவராலும் ஆட்சியை கலைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, 55 உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் கடந்த வாரம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நம்பிக்கையில்லா […]

புதிய சட்டம், ஒழுங்கு அமைச்சர் அடுத்தவாரம் நியமனம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு அடுத்த வாரம் வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேசத்தில் கடந்த சில தினங்களில் நடந்த கலவரமான நிலைமையை கட்டுப்படுத்துவதில் பிரதமர் தலையீடுகளை மேற்கொண்டதால் புதிய அமைச்சரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஐக்கிய தேசியக்கட்சிக்குரிய அமைச்சு பொறுப்பு என்பதால் அடுத்த வாரம் புதிய அமைச்சர் […]

அரசியலுக்கு வர ஆசைப்படும் பொலிஸ்மா அதிபர்! பிரதமரிடம் நிபந்தனை விதிப்பு

கடமையில் இருந்த கீழ் நிலை அதிகாரியை தாக்கியமை, சித்திரவதை மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றத்தை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்படும், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவியில் இருந்து விலக நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் கீழ் நிலை அதிகாரியை தாக்கும் காணொளி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, பொலிஸ்மா அதிபரை அழைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கௌரவமாக பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார். தான் பதவி […]

பிரதமரின் தேவைக்கு அமையவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது: ராஜித

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேவைக்கு அமையவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் தேசிய அரசாங்கம் ஆகிய வேலைத்திட்டங்கள் அரசியல் இலாபம் கருதிய வேலைத்திட்டங்கள் அல்ல. நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய வேலைத்திட்டம். […]

பரிகார பூஜை செய்ய இந்தியா செல்லும் பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டுச் செல்ல உள்ளார். தென் இந்தியாவில் கோயில் ஒன்றில் பூஜை ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் அவர் இந்தியா செல்ல உள்ளதாக தெரியவந்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது பாரதூரமான கெட்ட காலம் ஏற்பட்டுள்ளதால், அதற்கு பரிகாரமாக தென் இந்தியாவில் உள்ள கோயிலில் பூஜை ஒன்றை செய்யும் சதாசிவம் என்பவர் யோசனை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு […]

மஹிந்த முன்னதாகவே ஆட்சியை கலைத்தமைக்கான காரணம் இதுதான்: மட்டக்களப்பில் பிரதமர்

தாங்க முடியாதளவு கடன் சுமை இருந்த காரணத்தினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியை முன்னரகவே கலைத்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 55 கோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வின் முதல் நிகழ்வாக இன்று ஏறாவூர் நகரத்தில் 120 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஏறாவூர் நகரசபைக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். கிழக்கு மாகாண […]