நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்றுவருகின்றது. அலரிமாளிகையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய நிலை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் குறித்தும் கலந்துரையாடப்படுகின்றன. இந்த சந்திப்பிற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் …
Read More »கிளிநொச்சி விரையும் பிரதமர் ரணில்
கிளிநொச்சி முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சிக்கு செல்லவுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் மக்கள் பிரதமரை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.
Read More »பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன?
பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அந்த உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,நாட்டின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வினை ஏற்படுத்தி, வழமை நிலைக்கு கொண்டு வந்து பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும். அத்துடன் பாராளுமன்றமும் நீதிமன்றமும் உரிய வகையில் செயற்பட்டமை குறித்து பெருமை அடைவதாகவும், நாட்டில் அரசியல் அமைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக குரல் கொடுத்த அனைவருக்கும் தான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
Read More »ஜனாநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என ரணில் பெருமிதம்
இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மைக்கு கிடைத்த வெற்றியாக, இன்றைய பதவியேற்பு நிகழ்வை தாம் பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாறாக தனக்கோ ஐக்கிய தேசியக் கட்சிக்கோ கிடைத்த வெற்றி இதுவல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிரதமராக இன்று பதவியேற்றதன் பின்னர் அலரிமாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, நாட்டின் அரசியலமைப்பை உறுதிப்படுத்தப்படுவதற்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் …
Read More »ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையே முறுகல்
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையே முறுகல்நிலை உருவாகியுள்ளதாக உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம், ஒழுங்கு அமைச்சை எவரிடம் கையளிப்பது என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்தே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று கடந்தவாரம் இடம்பெற்றது.அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசீம், அகிலவிராஜ் காரியவசம், ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இதில் பங்கேற்றனர். சந்திப்பில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “”சட்டம், ஒழுங்கு …
Read More »எந்தநேரத்திலும் ஆணைக்குழு முன் விளக்கமளிப்பதற்கு நான் தயார்! – பிரதமர் ரணில் தெரிவிப்பு
“பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றேன்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் குறித்து தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு விளக்கமளிக்க, எந்த நேரத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருக்கின்றார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ரவி …
Read More »அவசரம் வேண்டாம்! விஜயதாஸ தொடர்பில் நாளை முடிவெடுப்போம்!! – ஐ.தே.க. உறுப்பினர்களுக்கு ரணில் அறிவுரை
அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கும் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பற்றி நாளை 17ஆம் திகதி வியாழக்கிழமை கலந்துபேசி முடிவொன்றை எடுப்போம் எனவும், அதுவரை அவசரப்படாமல் இருங்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் பற்றி கலந்துபேசி முடிவொன்றை எடுக்கலாம் எனவும், …
Read More »’20’ குறித்து ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இன்று விசேட கூட்டம்! – பிரதமர், கட்சித் தலைவர்கள் பங்கேற்பு
20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய முன்னணி அரசிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்கவுள்ளனர். அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தும் வகையில், மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கும் வழங்கும் 20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டவரைபை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் …
Read More »ரவிக்கு ஜனாதிபதி – பிரதமர் அழுத்தம்?
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிணை முறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸூடன் ரவி கருணாநாயக்க தொடர்புகளை பேணி வந்துள்ளதாகவும், சில வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரவி கருணாநாயக்கவிடம் …
Read More »புதிய அரசமைப்புக்கு முன்னரே வருகின்றது தேர்தல் சட்டத் திருத்தம்! – உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திட்டத்துடன் தேசிய அரசு முயற்சி
புதிய அரசமைப்புக்கு முன்னதாகவே தேர்தல் திருத்தச் சட்டவரைபு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் நோக்குடனேயே இந்தச் சட்டவரைபைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது. புதிய அரசமைப்பில் தொகுதிவாரிப் பிரதிநித்துவம் 60 சதவீதமும், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 40 சதவீதமுமாகக் கலப்பு முறையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த …
Read More »