வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார். அவரது அமைச்சுப் பதவியில் சிலவற்றை திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சியவற்றை தானே பொறுப்பெடுப்பதாவும் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் குரேக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் பா.டெனீஸ்வரன் தானே அமைச்சுப் பதவியில் தொடர்வதாக ஏற்கனவே, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளமையால், இந்த விடயத்தில் சட்டஆலோசனை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் குரே சட்டமா அதிபர் […]
Tag: பா.டெனீஸ்வரன்
அடிப்படை உரிமையற்றவரை தற்காலிகமாக நீக்க முடியுமா? – ரெலோவிடம் கேட்கிறார் டெனீஸ்
“எனது அமைச்சுப் பொறுப்பை கபடத்தனமாகவும் – சூட்சுமமாகவும் தட்டிப்பறிக்க நினைக்கின்றார்கள். கட்சியின் அடிப்படை உறுப்புரிமைகூட இல்லாத என்னை ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக எப்படி இடைநிறுத்த முடியும்? கட்சி யாப்பில் அதற்கு இடமிருக்கின்றதா? கட்சியின் அடிப்படை உறுப்புரிமை பெற்ற நபரென்று சொன்னால், உறுப்புரிமை எனக்கு எப்போது வழங்கப்பட்டது என்பதை ஆதராத்துடன் பகிரங்கப்படுத்த முடியுமா?” – இவ்வாறு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் ரெலோவிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார். ரெலோவின் […]
கட்சியிலிருந்து நீக்கினால் நீதிமன்றத்தை நாடுவேன்! – வடக்கு அமைச்சர் டெனீஸ் தெரிவிப்பு
“ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான இரு வேறு நிலைப்பாடுகளுடன் கட்சி செயற்படுகின்றது. சட்டத்துக்கு மாறாகக் கட்சியிலிருந்து என்னை நீக்கினால் நீதிமன்றத்தை நாடுவேன். இருப்பினும் இன்னும் கட்சியில் ஜனநாயக விழுமியங்கள் இருப்பதாக நம்புகின்றேன்.” – இவ்வாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு மறுத்துள்ளமையால் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ரெலோவின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் […]
டெனீஸ்வரனின் முடிவால் செல்வம் எம்.பி. கவலை!
“வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தனது பதவியிலிருந்து விலக மறுத்திருப்பதும், கட்சி தனக்கு முக்கியமல்ல என்று தெரிவத்திருப்பதும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று ரெலோ அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சரவைக் குழப்பங்களைத் தொடர்ந்து அமைச்சர் டெனீஸ்வரனை பதவியிலிருந்து விலகுமாறு கட்சி கேட்டுக்கொண்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். அதனையடுத்து அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் கட்சியின் உயர்மட்டக் […]
டெனீஸ்வரனுக்குப் பதிலாக விந்தனை அமைச்சராக நியமிக்குமாறு முதலமைச்சருக்கு ரெலோ பரிந்துரை!
வடக்கு மாகாண அமைச்சரவையில் தமது கட்சியின் சார்பில் போக்குவரத்து, மீன்பிடி, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட பா.டெனீஸ்வரனை, அந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தமது கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை அமைச்சராக நியமிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ரெலோ நேற்றுக் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் சார்பில் வடக்கு மாகாண அமைச்சரவையில் […]
டெனீஸ்வரனைப் பதவி நீக்க ரெலோவோ, வடக்கு முதல்வரோ என்னுடன் ஆலோசிக்கவில்லை! – சம்பந்தன் தெரிவிப்பு
“வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனைப் பதவிநீக்குவதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ரெலோவோ அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரோ என்னுடன் கலந்தாலோசிக்கவில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ரெலோ அமைப்பு வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடந்த 13ஆம் திகதி கடிதம் அனுப்பியிருந்தது. தமது கட்சி சார்பான தங்கள் அமைச்சரவையிலுள்ள பா.டெனீஸ்வரனை […]
வடக்கு அமைச்சர் டெனீஸை நீக்க முதல்வர் முடிவு! – நடவடிக்கை எடுப்பேன் என்று ரெலோவுக்கு அவர் அறிவிப்பு
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கோரிக்கையின் பிரகாரம் பதவி நீக்கம் செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரை பதவி நீக்கியதால் தோன்றிய சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.சிறீக்காந்தாவினால் வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் […]





