பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மகாநாயக்க தேரர்களை சந்க்கவுள்ளனர். அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்தவர்களை மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு நாட்டிலுள்ள மூன்று பீடங்களின் மகாநாயக்கர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தனர். முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினைகள் இருந்தால், கலந்துரையாடல்கள் மூலம் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தேரர்கள் அறிவித்திருந்தனர். அத்துடன் மகாநாயக்கர்களும் பதவி விலகிய முஸ்லிம் பிரதிநிதிகளை விரைவில் சந்திக்க தயாராகவுள்ளதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இந்த …
Read More »மைத்திரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ள சு.க.பாராளுமன்ற உறுப்பினர்கள்!!
மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதி தலையிடவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். ஓக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதே தற்போதைய அரசியல் …
Read More »மகிந்தவை எதிர்த்து படையெடுக்கும் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்
மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த 122 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும் அந்தக் கட்சி நாடியுள்ளது. மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக பாராளுமன்றில் மூன்று தடவைகள் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். …
Read More »