மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திய பலாலிப் பொலிஸார் வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்து தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுடனும் பொலிஸார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று மருத்துவமனை வட்டாரத்தால் தெரிவிக்கப்பட்டது. சுன்னாகம் பகுதிநோக்கி உந்துருளியில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திச் சென்றதோடு வீதியால் பயணித்த பெண் ஆசிரியர் ஒருவரையும் மோதித்தள்ளினர். இதன்போது வீழ்ந்த இரு பொலிசாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சமயம் இருவரும் போதையின் […]





