பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது, கைதுகளை ஊக்குவிக்கும் வகையில் அமையும் என சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து எட்டாண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அதனை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது. உத்தேச புதிய சட்டமானது சந்தேகநபர்களை குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைப்பதற்கான அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச தர நிர்ணயங்களை பின்பற்றக்கூடிய வகையில் […]





