பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழித்து நாட்டில் அமைதியும் சுதந்திரமுமிக்க சூழலை விரைவில் ஏற்படுத்தும் பொறுப்பினை அரச தலைவர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வமத ஒன்றுகூடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். கொடூர பயங்கரவாதத்தினை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தற்போது கிடைத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இச்செயற்பாடுகளில் நாட்டின் பாதுகாப்பு துறையினர் மீது தான் […]





