Tag: நாமல் ராஜபக்ஷ

தகவல் அறியும் உரிமை எங்கே? நாமல் கேள்வி

அரசின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் தகவலறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியதாக மார்தட்டிக்கொள்ளும் அரசு, சமூக வலைத்தளங்களை முடக்கி பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சாடியுள்ளார். சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் எந்த அரசும் செய்யாத வகையில் தற்போதைய அரசு சமூக வலைத்தளங்களை முடக்கி வைத்துள்ளது. குறிப்பாக, தமக்கு சாதகமான நிலைப்பாட்டில் சமூக […]

என்னை மீண்டும் கைதுசெய்ய முயற்சி! – பதறுகின்றார் நாமல் 

தன்னை மீண்டும் கைதுசெய்யும் முயற்சி இடம்பெறுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசுக்கு எதிராகச் செயற்படுகின்ற அரசியல்வாதிகளைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, வசீம் தாஜுதீனின் கொலை விவகாரம் தன்னுடைய தம்பியின் காதலியிடமிருந்து ஆரம்பமாகி தனது அம்மா வரை வந்து முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “மக்கள் விடுதலை முன்னணியின் […]

ரணிலும் ரவியும் உடன் பதவி விலகவேண்டும்! – நாமல் வலியுறுத்து 

“முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் தில்லுமுல்லுகள் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் அம்பலமாகியிருப்பதால் அவரும் அவருக்குத் துணைநின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடனடியாகப் பதவி விலகவேண்டும்.” – இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஷ சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் வலியுறுத்தியுள்ளார். பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதான சூத்திரதாரியான […]

மைத்திரி மீது மஹிந்த அணி கடுகளவேனும் விசுவாசமில்லை! – நாமல் கூறுகின்றார் 

“நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் மைத்திரி மீது எமக்கு மதிப்பு உண்டே தவிர, அவர் மீது எமக்குக் கடுகளவேனும் விசுவாசம் இல்லை. இதனால்தான் மஹிந்த அணியால் அவரின் தலைமையை ஏற்று அவருடன் இணையமுடியாமல் உள்ளது.”  – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “எம்மைச் சிறையில் அடைத்ததையும் பொருட்படுத்தாது  எம்மை அமைப்பாளர் பதவியிலிருந்து […]

செய்த குற்றங்களுக்கு இப்போது தண்டனை! – வேதனையடைகின்றார் நாமல்.

எமது ஆட்சியில் நாம் செய்த குற்றங்களுக்கான தண்டனையை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதே குற்றங்களை நீங்களும் செய்யாதீர்கள் என்று அவர் தற்போதைய ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “எமது ஆட்சியில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கான தண்டனையை நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். அந்தக் […]